Theni

News January 8, 2025

தேனி மாவட்டத்தை சேர்ந்த 48 மாணவரகள்  வெற்றி 

image

மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 64 பள்ளிகளைச் சேர்ந்த 240 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் முதலிடத்தையும், 7 போட்டிகளில் 2-ம் இடத்தையும், 4 போட்டிகளில் 3-ம் இடத்தையும் பிடித்தது 48 பேர் வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

மகளுக்கு பாலியல் தொந்தரவு தொல்லை தந்தைக்கு சிறை

image

உத்தமபாளைத்தை சேர்ந்த 50 வயது பெண் அவருக்கு 55 வயதில் கணவரும் 16 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 2021ம் ஏப்ரலில் மகள் இரவில் தூங்கும் போது தந்தை பாலியல் தொந்தரவு செய்தார். இதனை தாயிடம் சிறுமி தெரிவித்தார். இது பற்றி சைல்டுலைன் எண்ணில் தாய் புகாரளித்தார். வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சிறுமி தந்தைக்கு 5 ஆண்டு சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News January 7, 2025

அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

image

தேனி ஜெயமங்கலம் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் படித்து வரும் ம.ரியா ஸ்ரீ என்ற மாணவி கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இதனை அந்தப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அந்த கிராமப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி கொண்டாடி வருகின்றனர்..

News January 6, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 06.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 6, 2025

தேனி மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை வெளியீடு 

image

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஆண்டிபட்டி தொகுதியில் 2,77,620 வாக்காளர்களும், பெரியகுளம் தொகுதியில் 2,88,831 வாக்காளர்களும், போடிநாயக்கனூர் தொகுதியில் 2,75,153 வாக்காளர்களும், கம்பம் தொகுதியில் 2,82,709 வாக்காளர்களும், மொத்தம் 11,24,313 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 6, 2025

முல்லை பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டர்

image

தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அணை அமைந்துள்ளதால் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.5) அணைக்கு மேல் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை.

News January 6, 2025

தேனி அருகே 6 பேர் கைது 

image

கண்டமனூர் போலீசார் நேற்று (ஜன.5) ஜி.உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது அங்கு பால்பாண்டி, முருகன், ஈஸ்வரன், கோவலன், சக்கிவேல், புகழேந்திரன் ஆகிய 6 பேரும்  சீட்டுக்கட்டுகள் வைத்தும், பணம் வைத்தும் சூதாடியது தெரியவந்தது. சீட்டுக்கட்டு மற்றும் ரூ.300 பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.

News January 6, 2025

சின்னஓவுலாபுரம் பகுதியில் நாளை மின்தடை

image

தேனி அருகே சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.07) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, இந்திராகாலணி, எரசக்கநாயக்கனூர், முத்துலாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் நேற்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

கணவருக்கு மனைவி தீ வைப்பு; 5 நாட்கள் பின் கணவர் உயிரிழப்பு

image

கூடலுார் பகுதியை சேர்ந்தவர் பொன்விஜய். இவரது மனைவி இலக்கியா. குடும்ப தகராறு காரணமாக கடந்த டிச.31 அன்று தூங்கி கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றி மனைவி தீ வைத்தார். இதில் கணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் கூடலூர் வடக்கு போலீசார் இலக்கியாவை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.5) சிகிச்சை பலனின்றி பொன்விஜய் உயிரிழந்தார்.

News January 5, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 05.01.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!