Theni

News January 10, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

image

மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், 2025 – ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 10.02.2025 என்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜனவரி.10) காலை 10 மணி அளவில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து சிறப்பிப்போம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு விமான நிலையத்தில் பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) நிறுவனமானது, ஆதிதிராவிடர் & பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தில் பயிற்சி பெறுவதற்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம் அல்லது 04546-260995 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என நேற்று(ஜன.9) மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

தேனி: பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

image

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினர் மற்றும் தனிப்படையினரின் சீர்மிகு பணியை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

News January 9, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று(9.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.க சார்பில் மனு

image

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் தந்தை பெரியாரை பற்றி சீமான் தவறாக பேசி வருகிறார் என்றும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாவட்டத் தலைவர் சுருளி ராஜ், மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் தி.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News January 9, 2025

திருப்பதியில் 6 பேர் பலி: டிடிவி தினகரன் இரங்கல்

image

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று(ஜன.9) தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

8-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

image

ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட 02 ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிச. 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. 50% கூலி உயர்வு, 20% போனஸ் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி தொடர் 8 நாட்களாய் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News January 8, 2025

தேனி: விளையாட்டு அலுவலர் பணியேற்பு

image

தேனி மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றிய முருகன் மதுரைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கரூரில் இருந்து சிவகுமார் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அலுவலர் சிவகுமாருக்கு விளையாட்டு அலுவலர் முருகன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அலுவலகத்தில் உள்ளோர் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 8, 2025

WAY 2 NEWS பயன்படுத்தும் தேனி எம்பி

image

தேனி மாவட்டத்தில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வு, கலந்தாய்வு, கலெக்டர் அறிக்கைகள், கிரைம் செய்திகள், மக்களின் கோரிக்கைகளை நாம் தினந்தோறும் உடனுக்குடன் way2newsஇல் பதிவிட்டு வருகிறோம். இதையறிந்த தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் இன்று way2news செயலியை தனது சொந்த மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளார். இன்று முதல் எம்.பி.,யும் way2newsஇல் இணைந்து மக்களின் பிரச்னையை உடனுக்குடன் அறிந்து சரி செய்வார்.

error: Content is protected !!