India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக நவ.,2ல் திறக்கப்பட்ட நீர் நேற்று (நவ.7) நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு நாட்களில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 772 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.

தேனி மாவட்டத்தில் இன்று 07.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் 2023.அக்.1ல் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது செய்த நிலையில் இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.6) முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

தேனியில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போடியை சேர்ந்த அசோனியா (30) என்பவர் அவரது கணவரை விவாகரத்து செய்த நிலையில் காமாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தேனியில் வசித்து வந்துள்ளார். சில தினங்களாக காமாட்சி மற்றும் அசோனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அசோனியா நேற்று (நவ.6) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தேனி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

போடியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். சிறுமி என தெரிந்தும் திருமணத்திற்கு உடந்தையாக பிரகாஷின் தாயார் அமுதா, சிறுமியின் தாய், தந்தை இருந்துள்ளனர். இதுகுறித்து போடி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், அமுதா உள்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இன்று தேனி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). இவர் நேற்று (நவ.6) அவரது பைக்கில் உப்புக்கோட்டை பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் செல்வேந்திரன் என்பவர் ஓட்டிவந்த லாரி ஈஸ்வரன் பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.