India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டதில் குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மை தேர்வு எழுத உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு தேனி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட அலுவலகத்தில் நேரிலும், 04546-260995 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அறிவிப்பு.
தேனி மாவட்டத்தில் இன்று 10.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட வேளாண்மை துறை சார்பில், மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் சிறு, குறு,விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 40% மானியமாக பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9940702357, 94438 69956 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 21ம் தேதி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 22ம் தேதியில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை,பேச்சுப்போட்டிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளன.இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற பரிந்துரை செய்யப்படுவர் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. மேலும் விருது பெரும் சாதனையாளர்களுக்கு ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்
தேனி மாவடடத்தில் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி,சீனி, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இப்பொருள்கள் வாங்க ஜனவரி 13ஆம் தேதி வரை இருக்கும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேனி ஆவினுக்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.400 கூட்டுறவு பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் மூலம் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல்செய்யப்படுகின்றன. லிட்டருக்கு 50 பைசா வீதம் பொங்கல் போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அலுவலர்கள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் பணிபுரிவதற்கான சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. படிப்பு பிளஸ்2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி. 18ல் இருந்து 23 வயது வரை.விருப்பமுள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நாடலாம் என தேனி ஆட்சியர் ஷஜுவனா தெரிவித்துள்ளார்.
மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், 2025 – ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 10.02.2025 என்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜனவரி.10) காலை 10 மணி அளவில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து சிறப்பிப்போம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.