India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று முதல் ஜன.19 வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் நலன் கருதி மின்சாரத்துறை அதிகாரிகள் தங்களது பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையங்கள், மின் விநியோகப் பாதைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். சீரான மின் வினியோகம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பொது மக்கள் அவசர உதவி தேவைப்பட்டால் 94987 94987 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தேனி அரண்மனைப்புதூர் பசுமை நகரை சேர்ந்தவர் சுகந்தி. இவரிடம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் அவரது மனைவி கோகிலா ஆகியோர் தங்களது வீட்டை ரூ.63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விஜயகுமாரை கடந்த மாதம் கைது செய்த நிலையில் கோகிலாவை நேற்று (ஜன.11) கைது செய்தனர்.
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி ஜன.27.ல் துவங்குகிறது. இதில் சேர விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்
பொங்கலுக்கு முன்பு ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை நீக்கிவிட்டு(எரிக்க வேண்டாம்) போகி கொண்டாடுவது வழக்கம். மேலும், அன்று வீட்டில் கூரைப்பூ கொண்டு காப்பு கட்டி வழிபடுவர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் இன்று(ஜன.11) ஆவாரம் பூ, வெண் தும்பை, மா இலை, வேப்ப இலை உட்பட கூரைப்பூ சேகரித்து விற்பனை செய்யும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம், தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் 20.01.2025 அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். தகுதியுள்ள நபர்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலையும், சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருது வழங்கப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இன்று(ஜன.11) தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுந்திர போராட்ட வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பலருக்கும் இருமலுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனவே காய்ச்சல் பரவலை தவிர்க்க கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பதையும் தொடர வேண்டும் என மாவட்ட சுகாதார துறை அறிவுறுத்தல்.
தேனி மாவட்ட அணைகளின் (ஜன.11) நீர்மட்டம்: வைகை அணை: 64.67 (71) அடி, வரத்து: 791 க.அடி, திறப்பு: 1219 க.அடி, பெரியாறு அணை: 123.80 (142) அடி, வரத்து: 102 க.அடி, திறப்பு: 933 க.அடி, மஞ்சளார் அணை: 50.90 (57) அடி, வரத்து: 26 க.அடி, திறப்பு: 50 க.அடி, சோத்துப்பாறை அணை: 116.44 (126.28) அடி, வரத்து: 14 க.அடி, திறப்பு: 27 க.அடி, சண்முகா நதி அணை: 44.60 (52.55) அடி, வரத்து: 0 க.அடி, திறப்பு: 14.47 க.அடி.
போகிப் பண்டிகைக்கு பழைய பொருள்களை எரிப்பதாக கூறி நெகிழி, டயா் ஆகியவற்றை எரிக்கும் போது நச்சுப் புகை வெளியேறுவதால் சுற்றுச் சூழலும், பொதுமக்களின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சுவாசப் பிரச்னையும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாசு இல்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தேனி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.