Theni

News January 14, 2025

தேனி எம்.பி. பொங்கல் வாழ்த்து

image

அனைத்து பகுதிகளிலும் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் இருள் விலகி தங்களது வாழ்வில் வெற்றி சூரியன் உதித்திட அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தனது தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

இந்த பொங்கலை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்களின் பொங்கல் கொண்டாட்டத்தை way2news-ல் பதிவிடலாம். இந்த தை பொங்கலுக்கு உங்கள் வீட்டில் அலங்கரித்து வைக்கப்படும் பொங்கல் பானையைப் புகைப்படம் எடுத்து, உங்களின் பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றைப் பதிவிட்டு நமது way2news app மூலம் அனுப்பலாம். இதை எப்படி பதிவிடலாம் என்பதை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. way2news-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

News January 14, 2025

விமானப்படை மருத்துவ உதவியாளர் தேர்வு அறிவிப்பு

image

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் மருத்துவ உதவியாளர் (Medical Assistant) தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு 29.01.2025 அன்றும், மருத்துவ உதவியாளர் (மருந்தாளர்) விண்ணப்பதாரர்களுக்கு 04.02.2025 அன்றும் தேர்வு நடைபெறும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று (ஜன.13) தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

தேனி மாவட்டத்தில் 15ஆம் தேதி மதுபான கடைகள் மூடல்

image

2025ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மூடி இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

தேனி மாவட்ட சத்துணவு அலுவலர் பணி ஏற்பு

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) அண்ணாத்துரை பணி ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். அலுவலர்களும், பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News January 13, 2025

தேனி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று (ஜன.12) மதியம் கூடலூர் பைபாஸ் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற 3 பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா வைத்திருந்த தெய்வம், செல்வம், தினேஷ் ஆகிய மூன்று பேரை கைது வழக்கில் தொடர்புடைய சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

News January 12, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 12.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 12, 2025

காற்றின் தரத்தை பாதுகாக்க ஆட்சியர் வேண்டுகோள்

image

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 13.01.2025 அன்று போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.

News January 12, 2025

வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும்: டி.டி.வி தினகரன்

image

“பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தேனி முன்னாள் எம்பி டி.டி.வி.தினகரன் தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

SSI விவகாரம்: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

image

திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த SSI கைது செய்யப்பட்ட நிலையில், குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவலர்களே குற்றவாளிகளாக மாறினால் பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும்? காவலர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான உரிய சீர்திருத்தங்களை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என தேனி முன்னால் எம்பி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!