India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர் சேலத்தினை சேர்ந்த பாகுபலி காளைக்கு வழங்கப்பட்டது.
2ம் பரிசான பைக் தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூரை சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. 3ம் பரிசாக தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் காளைக்கு சிறந்த காளைக்கான எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது.
தேனி அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த மோகன்பால் (21) தனது நண்பர் பிரகாஷுடன் ஜன.11 அன்று நடந்து சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்,அஜீத் இவரது நண்பர்கள் கெளதம்,பிரவீன்,ரஞ்சித்,லட்சுமணன் ஆகியோா் சோ்ந்து மோகன்பாலுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.
கம்பத்திலிருந்து நெடுங்கண்டம் சொல்லக்கூடிய வனப்பகுதிக்குள் நேற்று (ஜன.15) கம்பம் வனச்சரக வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது வனப்பகுதிக்குள் எறும்பு மொய்த்த நிலையில் ஆணா பெண்ணா என அடையாளம் தெரியாத வகையில் எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயம் பொருளாதாரம் மேம்பாட்டுக்காக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகை ரூ.3.50 லட்சம். அந்த தொகையை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் 6% வட்டி மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். (பயனுள்ளவர்களுக்கு பகிருங்கள்)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. மேலும் மாவட்ட மேலாளர் அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி அவர்களை நேரிலோ அல்லது 04546 260995 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் அலைபேசி மூலம் மின்மோட்டர் இயக்குதல்,பழைய மின்மோட்டார்களை புதுப்பித்தல் செய்ய மானியம் வழங்கப்படுகிறது.அதே போல் தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய உழவு மானியம் 1 ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்படுகிறது.1 விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உள்ளவர்கள் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிலரை தேர்வு செய்து நீட் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக 8 வட்டாரங்களிலும் தலா 5 மாணவர்கள் தேர்வு செய்யும் பணியை கல்வித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 40 மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுருளிப்பட்டியை சேர்ந்த சில குடும்பத்தினர் கருநாக்கமுத்தன்பட்டி விலக்கில் உள்ள கோயில் ஒன்றில் தை முதல் நாளில் நேற்று (ஜன.14) பொங்கல் வைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புளியந்தோப்பில் இருந்த தேன் கூட்டை பறவை ஒன்று கொத்தியதால் கூடு கலைந்து தேனீக்கள் வெளியேறி அருகில் இருந்த அவர்களை கொட்டியது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று தை திருநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் தனது வீட்டில் பொங்கல் வைத்து சாமிக்கு படையல் இட்டு தனது குடும்பத்தினருடன் சாமி வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் இன்று 14.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.