Theni

News January 22, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் இளம் தொழில் வல்லுனர் பணி

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணியிடம் தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் (on Out Sourcing Basis) நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://theni.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். 

News January 22, 2025

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.01.25  அன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலி பணியிடங்களுக்கு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 7904706709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News January 21, 2025

தேனியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெற்று கொள்ளுமாறு என இன்று (ஜன.21) மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

தேனியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

image

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜன.30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து ஜனவரி 30.01.2025 முதல் பிப்ரவரி 15.02.2025 வரை தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பர்ட்ஸ் (தொட்டு அரவணைத்தல்) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. தொழுநோய் விழிப்புணர்வு பணிகள், கண்டுபிடிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்தவர் உயிரிழப்பு

image

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் முருகன் (46) என்பவரை மாடு மார்பில் குத்தியதில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

News January 21, 2025

தேனியில் உள்ள 130 ஊராட்சிகளில் கூட்டம் – ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது அடிப்படை வசதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மனுக்களை அளித்து பயன் பெறுமாறு இன்று (ஜன.21) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

வேலை வாங்கித் தருவதாக 1.11 கோடி மோசடி – பெண் கைது

image

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சுந்தர விக்னேஷ் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் பலரிடம் தேனி மாவட்டத்தை சேர்ந்த கனக துர்கா, சூர்யா, சரண்யா ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏற்கனவே கனக துர்காவை கைது செய்த நிலையில் நேற்று (ஜன.20) சரண்யாவை கைது செய்தனர்.

News January 20, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 20.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 20, 2025

இளைஞர்களுக்கு உதவித்தொகை: ஆட்சியர் தகவல்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.03.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என இன்று (ஜன.20) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

தேனி மாவட்டத்தில் மழை நிலவரம் 

image

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (ஜன 20) ஆண்டிப்பட்டி 9.2 மி.மீ, அரண்மனைப்புதூர் 10 மி.மீ, வீரபாண்டி 8.4 மி.மீ, பெரியகுளம் 20 மி.மீ, மஞ்சளாறு 7.4 மி.மீ, சோத்துப்பாறை 24 மி.மீ, வைகை அணை 5.8 மி.மீ, போடிநாயக்கனூர் 9.6 மி.மீ, உத்தமபாளையம் 6.8 மி.மீ, கூடலூர் 6.6 மி.மீ, பெரியாறு அணை 13.2 மி.மீ, தேக்கடி 17.8 மி.மீ, சண்முகா நதி 15.6 மி.மீ. சராசரி மழை அளவு =11.87 மி.மீ

error: Content is protected !!