India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அனைவருக்கும் இனிய 76 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி பல்வேறு நபர்களிடம் கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையால் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கணபதி வயது 25 என்பவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார.இது குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தேனி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும் தேனி மாவட்டம் போடி எம்எல்ஏ வுமான ஓ.பன்னீர் செல்வம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாலுமி இல்லாத கப்பல் போல தலைமை ஆசிரியர்கள் இல்லாத அரசுப் பள்ளிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் தேனி மாவட்ட பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு என்று தாய்மொழிக்காக தன்னுயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீரவணக்கம்! என புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேனியை சேர்ந்த ஆண்டவர் தன்னிடம் தங்கமணி, பாலமுருகன், சம்பழகு, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 நபர்கள் சேர்ந்து தங்களிடம் ஒரு சுவாமி சிலை உள்ளதாகவும் அந்த சுவாமி சிலைக்கு பூஜை செய்தால் அச்சிலை பேசும், செல்வம் பெருகும் எனக்கூறி உலோக சிலையை ரூ.1 கோடிக்கு விலை பேசி ரூ.5,000 முன்பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட 6 பேரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (ஜன.24) கைது செய்தனர்
தேனி மாவட்டத்தில் இன்று 24.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,609 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 645 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 1,761 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 1.675 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கிறது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 171.5 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் விதை 4.82 மெ.டன்னும் சிறுதானியங்கள் 3.70 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, மற்றும் உளுந்து) 12.6 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை) 5.9 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.