Theni

News November 13, 2024

ராணுவ வீரருக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வர்

image

தேனியைச் சேர்ந்த இராணுவ வீரர் முத்து ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணமடைந்தார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் O.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “ராணுவ வீரரின் இறப்பு  செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்; அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

News November 12, 2024

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (12.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 12, 2024

பள்ளி மாணவர்களுக்கு தேனி கலெக்டர் அறிவிப்பு

image

“தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவம்பர் 17ஆம் தேதி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது” என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

image

தேக்கடியில் ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (நவ.12) தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவினா, இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 12, 2024

தேனி போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

தேனி அருகே அழகாபுரியைச்சேர்ந்த கண்ணன் என்ற குப்புசாமி(47). கடந்த 2021ஆம் ஆண்டு செப்.6ஆம் தேதியன்று தேனி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதி முடிவில் இன்று(நவ.12) நீதிபதி கணேசன் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45000 அபராதம் வழங்கி தீர்ப்பு அளித்தார்.

News November 12, 2024

முன்னாள் முதல்வருக்கு வித்யா பாரதி புரஸ்கார் விருது

image

ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியர் மகா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை முன்னிட்டு, சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்த அறக்கட்டளை சார்பில், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த பங்களித்தமைக்காக முன்னாள் முதல்வர் O.பன்னீர் செல்வத்திற்கு வித்யா பாரதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

News November 12, 2024

தேனி ராணுவ வீரர் ராஜஸ்தானில் வீர மரணம்

image

தேனி பங்களா மேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், இன்பவள்ளி தம்பதியினரின் மகன் முத்து(35). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் முடிந்து ரீனா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த(நவ.10)ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த போது முத்து வீர மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 12, 2024

தேனியில் சிறுமிக்கு திருமண ஏற்பாடு; 4 பேர் மீது வழக்கு பதிவு

image

போடி அருகே முந்தல் சேர்ந்தவர் முத்து, இவருக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக போடி விரிவாக்க அலுவலர் பூபதி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து காவல்துறை சிறுமியை திருமணம் செய்த முத்து, இவரது தாய் பொன்னாத்தா, உறவினர்கள் மாரியம்மாள், முத்தையா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 12, 2024

பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க ரூ.1 லட்சம் ஊக்கததொகை

image

தேனி மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க அரசு ரூ.1 லட்சத்தை ஊக்கத்தொகையாக வேளாண்துறை வழங்குகிறது. இந்தாண்டு போடி, பெரியகுளம், தேனி வேளாண் இயக்குனர் வட்டாரங்களுக்கு இத்திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற வேளாண், தோட்டக்கலை, பொறியியல் வேளாண் பட்டம் பெற்றவர்களுடன், கலை அறிவியல் பட்டம் பெற்றவர்களும் தற்போது விண்ணப்பித்து பயன்பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 12, 2024

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

image

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன் தினம் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று(நவ.11) முதல் வினாடிக்கு 3082 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.