India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடமலைக்குண்டு சேர்மலைராம் திருமண மண்டபத்தில் நவ.15ஆம் தேதியன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள அப்பகுதி விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்திருக்கிறார். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன் மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (BC) மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவனச் செயலாளர் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று(நவ.13) மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் பணியிலிருந்த தேனி சங்ககோணம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த ராணுவ வீரர் முத்து ராணுவ பயிற்சியின் போது வீர மரணமடைந்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தேனி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் Ex.CM OPS தம்பி ஓ.ராஜா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று(நவ.13) நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இவ்வழக்கு தொடர்புடைய ஓ.ராஜா உட்பட 6 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில், ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேக்கடியில் நேற்று(நவ.12) நடைபெற்ற கூட்டத்தில், சபரிமலை வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இரு மாநில ஆட்சியர்கள் அறிவித்தனர். அதன்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். ஐயப்பன் செயலி மூலம் பக்தர்கள் செல்லும் பாதை, பூஜை நேரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது
தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் நவ.30 வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்பு திட்டங்களை தொடங்குவது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இதனால் மக்கள் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திலும், ஆண் குழந்தைகளுக்கு செல்வ மகன் சேமிப்பு திட்டத்திலும் கணக்குத் தொடங்கி பயனடையலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் அளித்துள்ளார்.
தேனி கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட வர்களுக்கு வருகிற 17ந் தேதி பாரஸ்ரோடு, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன. அன்றைய தினம் காலை 9 மணி முதல் போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு நடைபெறவுள்ளது.மேலும், விவரங்களுக்கு 0452-2566420 மற்றும் 99445-73528, 88703-40186 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
போடி, தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரராஜ் தனது நண்பர் ராஜமாணிக்கத்துடன் நேற்று (நவ.12) வேலைக்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது விமல் ராஜ், சூர்ய பிரகாஷ் ஆகியோர் வந்த டூவீலர் வீரராஜ் ஓட்டி சென்ற டூவீலர் மீது ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் விமல்ராஜ் உயிரிழந்தார். மற்ற மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராம்கர் ஜெய்சல்மீர் என்ற இடத்தில் விபத்தில் மரணம் அடைந்த தேனியை சேர்ந்த படைவீரர் நா.முத்துவின் உடலுக்கு இன்று (12.11.2024) தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியகுளம் சார் ஆட்சியர்ரஜத் பீடன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.