India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா உத்தரவின் பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜா ஷியாம் ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில்:- தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. அனைத்து தொழில் அமைப்பில் வேலைசெய்கின்றவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என்றார்.
தேனி, கண்டமனுார் அருகே ஜி. உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(50), நிருபராக பணிபுரிகிறார். நவ.13 அன்று கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் அரிவாளுடன் மூவர் ஓடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து எங்கே ஓடுகிறீர்கள் என கேட்ட பால்பாண்டியின் இடது பக்க தலையில் அரிவாளால், வெட்டினர். பின்னர் பால்பாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். கண்டமனுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வருசநாடு செல்வம் மற்றும் தொல்லியியல் ஆய்வாளர் காந்திராஜன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சவுடம்மன் கோவிலில் 18-ம் நூற்றாண்டைச் சார்ந்த 2 செப்பேடுகள் இருப்பதை கண்டறிந்தனர். அவர்கள் கூறும் போது:- ஒரு செப்பேட்டில் பணத்திற்கு மோதல் மற்றொரு செப்பேடில் அண்ணன் -தம்பி பிரச்சனை என்றார்.
தேனி மாவட்டத்தில் இன்று (14.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் முழுவதும் குளம் மற்றும் கண்மாய்களில் அதிக அளவு வண்டல் மண் திருட்டு நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக கனிமவள அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், இதற்கு அதிகாரிகள் துணைபோகின்றதை கண்டித்தும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக உத்தமபாளையம், ஆண்டிபட்டி பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் திருமலைமுத்து (ஓய்வு) தலைமையில் இன்று (நவம்பர் 14) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் மனு அளித்த அனைவரையும் நேரில் அழைத்து உரிய விசாரணை மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேனி சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறந்த பள்ளிக்கான விருதும் கேடயமும் வழங்கினார். விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அரசின் அறிவுறுத்தலின்படி, நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் தங்களது உரிமத்தினை விட்டு கொடுப்பது தொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்கிற இணையதளத்தின் மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாக பணி புரிந்தவர்கள் நிறுவனங்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04546252086 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் நவம்பர் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (நவ.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.