India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் ஜூன்.19ஆம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் சமரசத்துக்கு முந்தைய பேச்சுவார்த்தைக்கான அமா்வு நடைபெறுகிறது. இந்த அமா்வில் நேரிலோ, காணொலி காட்சி மூலமோ வழக்காடிகள் , வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு வழக்குகள் மீது தீா்வு காணலாம். 04546-291566-ல் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவுசெய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் திரவ உயிா் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஏக்கா் ஒன்றுக்கு அரை லிட்டா் திரவ உயிா் உரத்தை பயன்படுத்தலாம். திரவ உயிா் உரம் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநா் அறிவித்துள்ளார்.

பெரியகுளம் வட்டத்தில் 19.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரை கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அப்பகுதியில் தங்கி அரசு திட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி வழங்கி பயன்பெறுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

பெரியகுளம் வட்டத்தில் 19.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரை கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அப்பகுதியில் தங்கி அரசு திட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி வழங்கி பயன்பெறுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

தேனி, தாடிச்சேரியில் ஆட்டோ, டூவீலர்கள் வேகமாக ஓட்டுவது தொடர்பாக இருதரப்பு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜூன்.13 இரவு இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி ஜூலை 10 இல் துவங்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் நகலுடன் ஜூலை 10 க்குள் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் கடந்த ஏப்.26 முதல் ஜூன்.13 வரை கோயில் வளாகங்களில் நிரந்தரமாக 12 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய ரூ. 34 லட்சத்து 77 ஆயிரத்து 788, 144 கிராம் தங்கத்திலான காணிக்கை பொருட்கள், 470 கிராம் வெள்ளியிலான பொருட்கள் கணிக்கையாக கிடைத்துள்ளது.

ஆண்டிபட்டி போலீசார் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜீன்15) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணியக்காரன்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடை பின்புறம் பணம் வைத்து சூதாடிய அந்தோணி ராஜ், பிச்சமுத்து, ஜான் செல்லத்துரை, பெரிய அன்னமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.600 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கவியரசன். இவர் நேற்று தனது நண்பர் டிராவிட் என்பவருடன் காரில் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பழைய ஆர்டிஓ ஆபீஸ் அருகே வந்த போது நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் உருண்டது. காரில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், தேனி மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், பாலூத்து ஊராட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்
அமைக்கப்பட்டிருந்த சிறு புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.