India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் விடுத்துள்ள செய்தியில்:- தமிழக வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி.கல்லூரி மாணவ-மாணவிகளின் படைப்பாற்றல்,பேச்சாற்றல் வளர்க்கும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு 14ந்தேதியும், 15ந் தேதிகல்லூரி மாணவர்களுக்கு இரு கட்டங்களாக நடக்கிறது எனவே மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2021க்கு பின் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (26). இவர் நேற்று (அக்.5) அப்பகுதியில் நடந்த உறவினரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவரது தந்தையை அழைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலை தடுப்புச் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு.

தேனி, ஜெயமங்கலம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி அரசு பள்ளி தொடா் விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று (அக்.6) பள்ளியை தலைமையாசிரியை திறந்துள்ளார். அவர் பள்ளியின் பொருள்கள் வைத்திருந்த அறைக்கு சென்று பாா்த்த போது அங்கிருந்த ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த டிவி, ஒலிபெருக்கி, தையல் இயந்திரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு.

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்கபட உள்ளது. இந்த சேவை மையம் அமைக்க தோட்டக்கலை, வேளாண், வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் https://tnagrisnet.tn.gov.in/KaviaDP/ register என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் முன் கூட்டியே விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க 33 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆர்.டி.ஓ., எஸ்.பி., தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தபின் உரிய அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.

தேனி, ஜி.கல்லுப்பட்டியை சோ்ந்தவா் தனபால் (23). அவரது நண்பர் சசிக்குமார் (27) என்பவருடன் நேற்று முன்தினம் சில்வார்பட்டியில் உள்ள கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். பைபாஸ் சாலையில் வந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த இவர்கள் பைக் லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த இருவரும் உயிரிழந்தனா். போலீசார் விசாரணை.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.