Theni

News September 20, 2024

பொது வெளியில் பெண்ணின் ஆடியோவை வெளியிட்டவர் கைது

image

தேனியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஆகாஷ் என்பவர் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகிய நிலையில் ஆகாஷ் அவரிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு அந்த பெண் மறுக்கவே இளம்பெண் தன்னிடம் பேசிய சில ஆடியோ பதிவுகளை பதிவேற்றி பொது வெளியில் ஆகாஷ் வெளியிட்டார். இதுகுறித்த புகாரில் தேனி சைபர் கிரைம் போலீசார் ஆகாஷை (செப்.19) கைது செய்தனர்.

News September 19, 2024

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகம் வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.20ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். எனவே இந்த முகாமில் 10, 12, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

தேனியில் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்த ஆட்சியர்

image

தேனியில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ள 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான நேர்காணல் இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8668107552, 8668101638 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

ரூ.1 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

சுக்குவாடன்பட்டி தனியார் நிதி நிறுவன மேலாளர் மணிகண்டன், வடபுதுபட்டி பிரேமாவிடம் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் ரூ.72 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பிரேமா தேனி மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில் அவர் ரூ.99.50 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்ததையடுத்த மணிகண்டனை கைது செய்த போலீசார் இன்று சரவணன், பாலக்குமாரை சிறையில் அடைத்தனர்.

News September 19, 2024

குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

image

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட எருதி மக்கள் பட்டி கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் தெரிந்து வந்த ராஜதானி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

News September 18, 2024

தமிழக – கேரள எல்லையில் நிபா வைரஸ் சோதனை தீவிரம்

image

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையான கம்பம் மெட்டு, லோயர்கேம்ப் பகுதிகளில் தேனி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலரின் தலைமையில் சுகாதாரத்துறையினர் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் வருபவர்களுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

News September 18, 2024

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் மரங்கள்

image

தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் உள்ள புளிய மரங்களை உரிய அனுமதியின்றி கேரள மாநிலத்திற்கு லாரியில் ஏற்றிச்செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கம்பம் வனப்பகுதியில் வனத்துறையினரின் சோதனைச் சாவடி இருந்தும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடப்பதாக அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

News September 18, 2024

தேனியில் 284 மது பாட்டில்கள் பறிமுதல்- போலீசார் விசாரணை

image

தேனி மாவட்ட மதுவிலக்கு போலீசார் கொடுத்த தகவலின் பேரில், கண்டமனூர் போலீஸ் எஸ்ஐ முகமது யாகிய தலைமையிலான போலீசார் நேற்று ஜி.உசிலம்பட்டி சாலையில் எஸ்.கதிர் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 284 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பிறகு இது தொடர்பாக வைரவன், காட்டு ராஜா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

News September 18, 2024

எஸ்.ஐ -யை அடித்த இன்ஸ்பெக்டர், எஸ்.பி விசாரணை

image

கண்டமனுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக கண்ணன் உள்ளார். இதே ஸ்டேஷனில் உள்ள எஸ்.ஐ.,மலைச்சாமிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் வழக்கு தொடர்பான விசாரணையில் நேற்று முன்தினம் (செப்.16) இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் கண்ணன் எஸ்.ஐ., கன்னத்தில் அறைந்துள்ளர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி எஸ்.பி சிவப்பிரசாத் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News September 18, 2024

தேனியில் நிஃபா வைரஸ் கண்காணிப்பு

image

தமிழகத்தில் நிஃபா வைரஸ் பரவாமல் தடுப்பதை உறுதி செய்யும் வகையில் தேனி மாவட்டம் எல்லையான குமுளி குமுளி பகுதியில் சுகாதாரத்துறை சார்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் பொதுமக்கள் அனைவரையும் முழு சோதனைக்குப் பிறகு தேனி மாவட்டத்திற்குள் அனுமதி மேலும் சுகாதாரத் துறை சார்பாக 24 மணி நேரமும் நிஃபா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.