India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி, ஆண்டிபட்டி காவல் நிலையம் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.27) ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த முருகன், தெய்வேந்திரன் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பைக்கில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 28) நீர்மட்டம்: வைகை அணை: 58.45 (71) அடி, வரத்து: 43 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 112.95 (142) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 66.91 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 34 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ளலாம் என தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தேனியில் புத்தக திருவிழா மார்ச் 23ல் துவங்கியது. தினமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடந்து வருகிறது. புத்தக திருவிழா மார்ச் 30ல் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் புத்தக திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புத்தக திருவிழாவை ஏப்.,1 வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
தேனி மாவட்டத்தில் நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2025 முதல் 08.06.2025 வரை 5 கட்டங்களாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் 1200 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் கோவில் . இந்த கோவிலில் ஞானாம்பிகையுடன் சிவன் சன்னதி உள்ளது . கோவில் திருவிழா சமயங்களிலும் , பங்குனி சிறப்பு நாட்களிலும் இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
ஆண்டிபட்டி அருகே வைகை புத்தூரைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. குடும்பத்துடன் கோவையில் தங்கிப் பணி செய்து வருகிறார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்து 1 பவுன் சங்கிலி திருடு போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வருசநாடு பகுதியில் அமைந்துள்ளது மாவூத்து வேலப்பர் கோயில். மிகவும் புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மன அமைதியை பெறவும் , குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீக்கவும் இங்கு வந்து மக்கள் பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.