India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சொத்து தகராறு காரணமாக அவரை கடந்த 2019 ஆண்டு முத்தீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்தார். அவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று கொலை குற்றவாளி முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.
தேனி மாவட்டத்தில் பனை விதை சேகரிப்போம் பரிசு மழை வெல்வோம் என்ற தலைப்பில் போட்டி நடைபெற உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை தன்னார்வலர்கள் அதிகளவில் பனை விதைகளை சேகரித்து ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அக்.1 முதல் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம். அதிகப்படியான விதைகள் சேகரிக்கும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 58வயது அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.4000 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியுடைய தமிழறிஞர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அக்.31ம் தேதிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் 1175 கன அடி குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57.15 அடியாக உள்ளது.
சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவியுடன் கேரளாவில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இவர்களது மகன் சூர்யா மது போதையில் சொத்தில் பங்கு கோரி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் செப்.25 அன்று கேரளாவில் இருந்து வந்த முருகனிடம் மீண்டும் தகராறு செய்த சூர்யா அரிவாளால் முருகனை வெட்டியதில் அவர் காயமடைந்தார். இது குறித்து சூர்யா மீது வழக்கு (செப்.26) பதிவு செய்து விசாரணை.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை, சான்றிதழ், பதக்கங்கள் வருகிற 27ம் தேதி அன்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வழங்கப்படவுள்ளது. எனவே முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்கள்/வீராங்கனைகள் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் செயலாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் அதே ஊரைச் சேர்ந்த சிவானந்தன் என்பவரிடம் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய ரூ.8,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சிவானந்தன் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாயை சந்திரசேகரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ஜோதிபாசு. இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனது 10 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முன்விரோதம் காரணமாக முன்னாள் மனைவியின் 3-வது கணவர் வேல்முருகனின் உறவினர்கள் ஜோதிபாசு மற்றும் அவரது 10 வயது மகளை கம்பால் அடித்து தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் 9 பேர் மீது கண்டமனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
க.விலக்கு அருகே பெருமாள் கோவில்பட்டியில் அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தனிப்பிரிவு போலீசார் க.விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். பிறகு எஸ்ஐ பிரபா தலைமையிலான போலீசார் ஜெயந்தி வீட்டில் சோதனை செய்ததில் ரூ.69,700 மதிப்புள்ள 97.245 கி.கி. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஜெயந்தியை கைது செய்து விசாரித்து வந்தனர்.
தேனி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க அலகிற்கு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பின் தங்களது சுய விவரங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தில்,நேரிலோ அஞ்சல் வழி மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.