Theni

News March 29, 2024

அமமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

image

ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் இன்று மாலை 5.30மணி அளவில் அதிமுகவிலிருந்து விலகி அமமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அமமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

நெருங்கும் தேர்தல்: ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்
கூட்டம் இன்று ஆட்சியர் ஷஜீவனா
தலைமையில் நடைபெற்றது.  உடன், தேர்தல் பொது பார்வையாளர் கௌரங் பாய் மக்வானா   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.

News March 29, 2024

தேனி: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

image

ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில்,  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

News March 29, 2024

தேனியில் இனி குதூகலம்

image

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.

News March 29, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

image

சின்னமனூர் நகராட்சியில் சொக்கநாதபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2024

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

போடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனா். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News March 29, 2024

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

image

தேவாரம் தே. மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், (47). இவர் கேரளா பகுதியில் ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அவரது மனைவி முருகேஸ்வரி கோபித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.. இதனால் மனம் உடைந்த கண்ணன் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்துள்ளார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.

News March 28, 2024

வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கிய ஆட்சியர்

image

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி பகுதியில் இன்று விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் திருவிழா விழிப்புணர்வு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News March 28, 2024

சித்திரை திருவிழா கொடியேற்றம்

image

அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார்,  சோலைமலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
இன்று காலை
11:30 மணியளவில் பனசலாறு மலைக்கோயில்
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகளும் பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

தேனி: குளு குளு மலர் கண்காட்சி

image

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

error: Content is protected !!