India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்ட ராமனுக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவல் படி அவர் போலீசாருடன் TKS நகர் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு கார் பார்க்கிங்கில் சோதனை செய்தபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 700 மது பாட்டில்களை கண்டுபிடித்தனர். பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் அங்கிருந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

ஆலந்தளிரை சேர்ந்தவர் சுருளி. இவர் அழகுமலை என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். குத்தகை காலம் முடிவடைந்ததால் 6 ஆம் தேதி குத்தகை பணத்தை அவர் திருப்பிக் கேட்கும் போது பிரச்சனை ஏற்பட்டது. அழகுமலையும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் சேர்ந்து சுருளியை கம்பி,அரிவாளால் தலையில் அடித்து, மகள் பேரன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கடமலைகுண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், தேனி, ஆண்டிபட்டி, போடி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஏப்.10ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தினை திமுக நிர்வாகி அன்பகம் பார்வையிட்டார். பின்பு பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியராக அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்டமனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டியை சார்ந்த மலைவாழ் பழங்குடியின பெண் (42) மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அறுவை சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டது. தகவலறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மற்றும் தன்னார்வலர்கள் 4 யூனிட் ரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார்.

ஆண்டிபட்டியை சேர்ந்த அருண் நேற்று இரவு தீனதயாளன் என்பவருடன் ஜம்புலிபுத்தூருக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். கள்ளர் விடுதி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனி பங்களாமேடு பகுதியில் நாளை மறுநாள் (9.4.2024) முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.

அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சியம்மாள். கடந்த 30ஆம் தேதி இவரது அண்ணன் அசோக்குமாருடன் இட பிரச்சினை காரணமாக செந்தில்குமார் என்பவருடன் சண்டை போட்டார். இதனை விலக்க சென்ற காமாட்சியம்மாளை செந்தில்குமாரும் அவரது மனைவி சுகன்யாவும் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தனர். மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது கம்பம் பார்க் ரோடு உழவர் சந்தை ரவுண்டானாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.