India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இன்று முதல்(ஏப்.17,18,19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றிட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும் என தேனி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று(ஏப்.17) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மென் பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி மே.8 முதல் மே.22 வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தேனி,தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒருமுறை சித்ரா பெளர்ணமியன்று நடைபெறும் திருவிழாவிற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி ஏப்.23 இல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ஏப்.23இல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே.4 பணிநாள் எனவும் அறிவிப்பு.

தேனி, ஆண்டிபட்டியில் இந்தியாவில் பல கிராமங்களில் இன்னும் பேருந்து வசதி மின்சார வசதி கூட இல்லாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்; இத்திட்டத்தால் 1.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இது போன்ற மக்களுக்கு மகத்தான திட்டங்களை கொண்டு வரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.ஸ

தேனி மக்களவை தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். 

கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் நாடாளுமன்ற உறுப்பினராக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என திமுக மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்புச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் முத்து விஜயன், சதீஷ்குமார், மணி கருப்பையா ஆகியோர் சபரிமலையில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 16.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7.95 லட்சம், பெண்கள் 8.24 லட்சம், இதர 218 பேர் உள்ளனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏப்.1ல் தொடங்கபட்டது. நேற்று முன்தினம் (ஏப்.13) வரை 13.84 லட்சம் வாக்காளர்களில், 85 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஷஜூவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.