India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.தேனி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தேனி மாவட்டம் 26 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 83.75% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.41 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தேனி மாவட்டத்தில் மாணவர்கள் 85.84% பேரும், மாணவியர் 94.04% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90.08% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் நேற்று வரை வினாடிக்கு 100 கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து, இன்று காலை முதல் வினாடிக்கு 405 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும் அணியிலிருந்து தமிழக பகுதிக்கு விவாதிக்க நூறு கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெரியார் அணை 24.8 மி.மீ, தேக்கடி 6.மி.மீ மழை பதிவாகி உள்ளது.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்காக மே 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விளையாட்டு போட்டிகளுக்கான தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆா்வமுள்ள இளநிலை, முதுநிலை வீரா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநரை அணுகி போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம்
கோம்பை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்பாலித்து வரும் பிரசித்தி பெற்ற
அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில்
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மலைக்கோவிலில் உள்ள
கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இன்று காலை விசேஷ பூஜை
செய்யப்பட்டு, வேதங்கள் முழங்க மலை
அடிவாரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்டம் வாரியாக விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கி மாநில, தேசிய, சர்வதே போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். இதற்கான வீரர்கள் தேர்வு மாவட்ட வாரியாக நடக்கிறது. இந்நிலையில் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.