India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு சார்பில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பங்கேற்க விரும்புபவர்கள் ரூ.100 செலுத்தி அக்.31க்குள் www.tn.horticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டியை சேர்ந்த காளீஸ்வரி(17) என்பவர் தேனி புதிய பேருந்து நுழைவு வாயில் அருகே நேற்று முன்தினம்(அக்.05) தனது உறவினர்கள் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து காளீஸ்வரி மீது மோதியதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து ஓட்டுநர் ஜெயக்குமார் மீது நேற்று(அக்.6) தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேனி, மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் சின்னபாண்டி. இவர் சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு தொடர அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரகு என்பவரை அணுகியுள்ளார். இந்நிலையில், அவர் வழக்கறிஞர் கட்டணம் ரூ.10,009, டிபாசிட் தொகை ரூ.3 லட்சம், நீதிமன்ற கட்டணம் செலுத்த ரூ.8,000 என மொத்தம் ரூ.3.18 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார். இதுகுறித்த புகாரில் ரகு மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனை வீரப்போயர் சங்க உறுப்பினர்களுடன் தேனி எம்.பி தங்க தமிழ் செல்வன் நேரில் சந்தித்தார். அப்போது, சீர் மரபினர் பிரிவினருக்காக அமைக்கப்பட்டுள்ள சீர் மரபினர் நலவாரியத்தில் ஒட்டர், போயர், சமூகத்தின் சார்பில் ஒரு நபர் கூட நியமிக்கவில்லை என்றும், அந்த சமுதாயத்தின் சார்பில் உடனடியாக 2 உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
தேனி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த கலெக்டர், எஸ்.பி. சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சில போதைப்பொருட்கள் பார்சல் சர்வீஸ்கள், கூரியர் மூலம் சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. இதனால் லாரிகள் மூலம் வரும் பார்சல்கள், அதனை கையாளும் நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடமலைக்குண்டு அருகே பாலூத்து பிரிவு பகுதியில் நேற்று இரவு 2 டூவீலர்கள் மோதிக் கொண்டது. இதில் பாலூத்தை சேர்ந்த வேல்முருகன் (23), பிரதீப் (16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த கடமவைக்குண்டு போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம், நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (48). இவர் புதுக்கோட்டையில் ஹால்ஸ் மதுபானம் தயாரிக்கும் ஆலையிலிருந்து கடந்த 18.09.24 அன்று வழக்கம்போல் லாரியில் மது பாட்டில்களை ஏற்றி மறுநாள் தேனி டாஸ்மாக் குடோனில் இறக்க வந்தபோது லாரியில் மூடப்பட்டிருந்த தார்ப்பாயை கிழித்து 1824 மது பாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் மூதாட்டியின் சடலம் கிடப்பதாக நேற்று(அக்.4) போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு மீட்பு குழுவினருடன் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முதல் கட்ட விசாரணையில் அவா் அணைப்பட்டியை சோ்ந்த ஒச்சம்மாள் (70) என தெரியவந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பத்தில் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர் நிலைக்குழு தலைவருமான ஓ.ஆர், இராமச்சந்திரனின் மறைவு செய்தி வேதனை அளிப்பதாகவும் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்கள், உறவினார்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், மரிக்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான தொழில் பேட்டைகளில் & ஆண்டிபட்டி 2 தொழில்மனைகளும் மரிக்குண்டு 38 தொழில்மனைகளும் காலியாக ஒதுக்கிட்டிற்கு தயாராக உள்ளது. புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகனை வாங்க விரும்புவோர் www.tansidon.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.