India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய திறன் மேம்பாட்டு தொழில்முனைவோர் அமைச்சகம் இணைந்து தேசிய அளவில் நடத்திய திறனறியும் போட்டி டில்லியில் நடைபெற்றது. இதில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கனிணி பொறியியல் மற்றும் அறிவியல் துறையின் மூன்றாமாண்டு மாணவர் S.முகிலன் வெப் டெக்னாலஜி திறனறியும் போட்டியில் பங்கு பெற்று தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.

மத்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024-க்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியான வீரர்கள் http://awards.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04545 253090 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, ஊத்தம்பாறை , பிச்சாங்கரை , கொட்டக்குடி போன்ற பகுதிகளில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போடி பகுதியில் உள்ள அனை பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைப்பதற்கும் பொதுப்பணி துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசாரால் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (மே.20) நீதிமன்ற காவலில் விசாரணைக்காக அவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக இன்று அழைத்துச் சென்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று(மே.22) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வைகை அணை திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதாலும், அந்தப் பகுதியில், தொடா்ந்து மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் -ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீா்வளத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே வராகநதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில விளையாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் கால்பந்து வீரர்களுக்கு மாநில அளவிலான தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 – 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மைதானங்கள் தயார் படுத்தப்பட்ட நிலையில், தேனிக்கு மே 23 வரை அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதிகளில் தென்னை மரங்களில் அதிகளவில் நோய் தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று(மே 21) வேளாண் துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள தென்னை தோப்பில் ஆய்வில் ஈடுபட்டு, சிகப்பு கூன் வண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து,
அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

தேனிக்கு நாளை (மே.22) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.