Theni

News May 25, 2024

உரம், பூச்சி மருந்து கடைகளில் வேளாண் துறையினர் ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண் அலுவலர்கள் பாலகணபதி, நாகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். பல மாதங்களுக்குப் பின் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

News May 24, 2024

தேனி: மர்மமான முறையில் பெண் மரணம்

image

கோவையில் வசித்தவர் இந்திராணி. இவர் பிசி பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். சித்தபிரமை நோயால் அவதிப்பட்ட இவர் 17ம் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி மர்மமான முறையில் அல்லிநகரம் பைபாஸில் தலையில் அடிபட்ட நிலையில் கிடந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

News May 24, 2024

தேனி அருகே சரமாரி தாக்குதல்

image

பெரியகுளம் T.கள்ளிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் திருவிழாவை பார்ப்பதற்காக மகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றபோது 3 நபர்கள் ஆட்டோவை மறித்து ஆட்டோவில் ஏறினர். அப்போது அவர்கள் ஆக்ஸிலேட்டரை திரிகியுள்ளனர். அதற்கு செந்தில்குமார், கண்டித்ததால் 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது அண்ணன் இருவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 24, 2024

4 மாதங்களுக்குப் பின் சுரங்கனாறில் நீர்வரத்து

image

கூடலுார் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுரங்கனாறு நீர்வீழ்ச்சி. இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்யும் போது இங்கு தண்ணீர் கொட்டும். வனப் பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அனுமதியில்லை. கடந்த 4 மாதங்களாக நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

News May 24, 2024

தேனி: இன்று மழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

தேனி: திருவிழாவில் தகராறு – அரிவாள் வெட்டு

image

பெரியகுளம் கீழ வடகரையை சேர்ந்தவர் முருகன். இவர் தரப்பிற்கும் வீராச்சாமி தரப்பினருக்கும் 22 ம் தேதி நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆட்டச்சட்டி எடுத்து ஆடுவதில் தகராறு ஏற்பட்டது. திருவிழா முடிந்தவுடன் வீராசாமி தரப்பினர் 4 பேர் முருகனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது அரிவாள் மற்றும் கம்பியால் தாக்குதல் நடத்தினர். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 23, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மாலை 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 23, 2024

தேனி நகராட்சியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு வைகை அணையில் இருந்து நீர் எடுத்து சுத்திகரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளை(மே 24) ஆகிய இரு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

பெரியகுளத்தில் பெண் வக்கீல் கைது

image

பெரியகுளத்தை சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி என்பவர் நேற்று பெரியகுளம் கனரா வங்கியில் பணம் செலுத்துவதற்காக சென்று உள்ளார். பணத்தினை சோதித்த வங்கி மேலாளர் அது கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த நிலையில் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் விக்னேஷ் மூர்த்தியிடம் வக்கீல் ஜீவஜோதி என்பவர் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ள நோட்டினை கொடுத்து தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

News May 23, 2024

தேனியில் பிளம்ஸ் பழங்கள் விற்பனை

image

கொடைக்கானலில் உற்பத்தி செய்யப்பட்ட பிளம்ஸ் பழங்கள் தற்போது தேனி நகர்பகுதியில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. பிளம்ஸ் பழங்கள் கோடை காலமான மே-யில் துவக்கி ஒரு மாதம் விற்பனை செய்யபட்டு வரும். இந்தாண்டு வரத்து தாமதமாக துவங்கி உள்ளது. தற்போது கிலோ ரூ.280 முதல் ரூ.320 வரை விற்பனையாகிறது. பொதுமக்கள் பலரும் பிளம்ஸ் பழத்தினை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

error: Content is protected !!