Theni

News May 28, 2024

தேனி மழைக்கு வாய்ப்பு!

image

தேனி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் கோடையில் பெய்து வந்த மழை தற்போது நின்று வெப்பநிலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 28, 2024

தேனி: சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி

image

சின்னமனூரைச் சேர்ந்தவர் சங்கிலி ராஜேஷ். இவர் உறவினர் பரத்வாஜ் என்ற சிறுவனுடன் வத்தலகுண்டு சென்று விட்டு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். எ.புதுப்பட்டி அருகே வந்தபோது நிலை தடுமாறிய டூவீலர் சாலை தடுப்பில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கிலி ராஜேஷ் உயிரிழந்தார். பரத்வாஜ் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

News May 27, 2024

உத்தமபாளையம்: வெளியான முக்கிய அறிவிப்பு

image

உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள், மாணவிகள் http://scert.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 73730 03457 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

தேனி அருகே குவியும் மக்கள்

image

தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மழைக்கான எச்சரிக்கை முடிவடைந்ததால், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதியளித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதனால் இன்று காலையில் சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கியுள்ளது.

News May 27, 2024

அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை

image

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கம்பம் நகரில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களால் பெரிய அளவில் இடையூறு ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஆணையாளருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி பொதுமக்கள் பேனர் வைத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 26, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தீவிர விசாரணை

image

ஆண்டிபட்டி, கன்னியப்பிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமியின் தாயார் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.சிறுமியின் தாயார் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News May 26, 2024

முகவர்களுடன் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நேற்று (25.05.2024) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

News May 26, 2024

பயன்பாடு இல்லாத புதிய சுகாதார நிலையம்

image

சின்னமனூரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கென கருங்கட்டான்குளத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.  புதிய கட்டடம் 20 நாட்களுக்கு முன் சுகாதாரத் துறையினரிடம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது. இந்நிலையில் அத்தகைய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

News May 25, 2024

தேனியில் 8 செ.மீ மழைப்பதிவு!

image

தேனி மாவட்டத்தில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரியாறு பகுதியில் 8 செ.மீட்டரும், தேக்கடியில் 3செ.மீட்டரும், கூடலூர், போடிநாயக்கனூரில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 25, 2024

தேனி: பெண் மீது கொலைவெறி தாக்குதல்

image

போடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கோமதி என்பவருக்கும் பொது சுவர் குறித்து பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி செல்வியை கோமதியும் அவரது கணவர் பைரவகுமாரும் சேர்ந்து அசிங்கமாக பேசி அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து செல்வி நேற்று போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

error: Content is protected !!