Theni

News May 29, 2024

வருசநாடு: திருவிழாவில் மண்டை உடைப்பு!

image

வருசநாட்டை சேர்ந்தவர் அறிவழகன். காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு மேளதாளத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தகராறில் சூரியபிரகாஷ் என்பவர் ஹாரன்அடித்ததை அறிவழகன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரியபிரகாஷ் கல்லால் அறிவழகன் மண்டையை அடித்து உடைத்துள்ளார். அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சூரியபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 29, 2024

தேனி: நழிவடைந்து வரும் நாட்டு மாடு வளர்ப்புகள்

image

தேனி மாவட்டத்தில் கம்பம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதிகளில் அதிகமாக நாட்டு மாடுகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள மக்கள் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக நாட்டு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது. மேலும்,  மேய்ப்பதற்கான இடங்கள் இல்லை எனவும் மலைகளில் வனத்துறை அனுமதிப்பதில்லை என தெரிவித்தனர். 

News May 29, 2024

பொதுமக்களுக்கு மின்வாரியத்தினர் அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் இன்னும் சில நாட்களில் பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில் தேனி பகுதியில் பலத்த காற்று, மழையினால் மரங்கள், கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் நேரடியாக அகற்ற முயற்சிக்க வேண்டாம். மின்வாரிய அலுவலகத்திற்கு 94987 94987 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மரங்கள் முறிந்த இடத்தில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என மின்வாரியத்தினர் அறிவுறுத்தல்.

News May 29, 2024

தேனி: மே 31 வரை அவகாசம் நீட்டிப்பு

image

தேனி மாவட்டம் சட்டம் சார் தன்னார்வலர் பதவிக்கு விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தேனி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.அறிவொளி அறிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

தேனி மாவட்டத்தில் மழை மாயம்; தொடரும் வெயில்!

image

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை மற்றும் கனமழை பெய்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரத்தையும் விட கொடூரமாக அடித்த வெயிலின் தாக்கத்தை இந்த மழை வெகுவாக தணித்தது . தற்போது பெரியார் அணை பகுதியில் 5.4 மி.மீட்டரும் தேக்கடி பகுதியில் வெறும் 0.6 மி.மீட்டர் மட்டும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் மழை பொழிவு இல்லை. 

News May 29, 2024

தேனி: மே 29ல் கலந்தாய்வு தொடக்கம்

image

வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே.29) தொடங்கி வருகிற ஜூன்.12 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவா்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அதன் 2 நகல்களை கொண்டு வர வேண்டும். பெற்றோா் அல்லது பாதுகாவலரை அழைத்துச் செல்ல வேண்டும் என கல்லூரி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News May 29, 2024

இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

image

தேனி மாவட்டத்துக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.  இந்நிலையில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்களது பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்களைக் தேனியிலிருந்து வாகனங்கள் மூலம் நேற்று (மே.28) எடுத்துச் சென்றனா்.

News May 28, 2024

லஞ்சப் புகாரில் வட்டாட்சியரிடம் விசாரணை

image

ஆண்டிப்பட்டியில் வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் காதர் செரீப். இவர் புதிதாக பெட்ரோல் பங்க் தொடங்க தடையின்மை சான்று வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News May 28, 2024

தேனி சனீஸ்வரர் கோயில் சிறப்பு!

image

தேனி, சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து வேண்டிக்கொள்வர். புராணக்கதைகளைக் கொண்ட இத்தலம் சனிப்பெயர்ச்சிகளில் மிகுந்த விசேஷத்துடன் பூஜைகள் நடபெற்று வரும். இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது.

News May 28, 2024

ஆதரவற்றோர்களுக்கு பிரியாணி வழங்கிய பிரபலம்

image

உலகம் முழுவதும் இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி நகர் பகுதியில் இயங்கி வரும் அனிபா பிரியாணி நிறுவனத்தினர் உலக பசி தினத்தினை அனுசரிக்கும் விதமாக மாவட்டத்தில் பசியால் வாடக்கூடிய 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தங்களது நிறுவனத்தின் சார்பில் பிரியாணி தயார் செய்து வழங்கினர். இந்நிகழ்வை சின்னத்திரை பிரபலம் KPY.பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

error: Content is protected !!