India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மதுவிலக்கு அமலாக்க விரிவு சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று(மே 31) ரோந்து சென்றனர். அப்போது உப்பார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே போதிராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையில் ஒருவருக்கு கிளாசில் மதுபானம் ஊற்றி கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் கடையை சோதனையிட்டு மது பாட்டில்களை கைப்பற்றி, பெட்டிக்கடையை பார் ஆக்கியதற்காக அவரை கைது செய்தனர்.

அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர்கள் தீபக், வினோத்குமார். இவர்களுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தினேஷ்குமாரை தீபக் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

இராஜதானியை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். நேற்று அதிகாலையில் அவரது டூவீலரை கணேசபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் தள்ளிக் கொண்டு போவதாக கிடைத்த தகவலின் பேரில் நடராஜன் ஆட்களுடன் சென்று அவரை சுத்தி வளைத்தார் . முத்துப்பாண்டி டூவீலரை போட்டு தப்பினார். புகாரின் பேரில் இராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள தனியாா் ஏ.டி.எம். மையத்தில் மே.29 இரவு மா்ம நபா்கள் சிலா் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனா். ஆனால், இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை உடைக்க முடியாததால் அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.

இராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனது தோட்டத்தின் அருகில் இறங்க முயன்ற போது ஆட்டோ டிரைவர் கவனிக்காமல் ஆட்டோவை எடுத்ததால் மல்லிகா கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட நிலையில், தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேனியில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது சின்ன சுருளி அருவி. மேகமலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் இந்த அருவி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் சீசன் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். நீர் வரத்தை தெரிந்து கொண்டு அருவிக்கு செல்வது நல்லது. பிரபலமடையாத சுற்றுலாத் தலமாக இருப்பதால் தங்கும் வசதிகள் இல்லை. அதற்கு ஏற்றார் போல் தயார் நிலையில் இந்த அழகிய அருவிக்கு வருகை தரலாம்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மணி தூண்டுதலில் அவரது நண்பர்கள் பழனி, நவநீத் , சுரேந்தர், ஹரி ஆகியோர் பெண்ணை கடத்தி சென்று காருக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிப்பட்டி 21, போடி 18, பெரியகுளம் 24, உத்தமபாளையம் 45 என மொத்தம் 154 மையங்களில் ஜூன். 9-ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் தாலுகா வாரியாக தேனி 12,433, ஆண்டிப்பட்டி 5098, போடி 5190, பெரியகுளம் 6610, உத்தமபாளையத்தில் 11538 பேர் என 40,869 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வழக்கில் பாலமுருகன் என்பவரை பழனிசெட்டிபட்டி போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து நேற்று (மே.29) 3:00 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சாவை துாத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் பெற்று, அதனை மகேந்திரன் என்பவருக்கு வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.