Theni

News June 4, 2024

தேனி: ஏறுமுகத்தில் உதயசூரியன்

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தேனி தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

தேனி: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தேனி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

தேனி கோட்டையை கைப்பற்றுமா அதிமுக?

image

2024 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மொத்தம் 68.84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019இல் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார், 6.57% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், அதிமுக சார்பில் V.T.நாராயணசாமி, பாஜக சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?

News June 3, 2024

மின் உற்பத்தி தொடக்கம்

image

லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (ஜூன்.2) முதல் 30 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

News June 3, 2024

தேனி: விஏஓ-க்களுக்கு ‘டீஷர்ட்’கள் வழங்க ஏற்பாடு

image

தேனி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களை  கொண்டு வரும் கிராம உதவியாளர்களுக்கு தனித்தனியாக பல்வேறு வண்ணங்களில் டி ஷர்ட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுளது. அதன்படி ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு நீலம், பெரியகுளம்- இளம் சிவப்பு, போடி-மஞ்சள், கம்பம்-பச்சை, சோழவந்தான்-வெண்மை, உசிலம்பட்டி தொகுதிக்கு ஆரஞ்ச் நிறத்திலான டி ஷர்ட்கள் வழங்கப்பட உள்ளன.

News June 2, 2024

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

image

வருஷநாடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பாண்டியம்மாளுக்கும், சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து மணிகண்டன் செலவு செய்துள்ளார்.இதனை சின்னக்காளை கண்டிக்கவே ஆத்திரத்தில் அவரை மணிகண்டன் கத்தியால் குத்தினார்.போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 2, 2024

பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு

image

தேனியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் நேரு சிலை அருகே உள்ள காய்கறி கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கடையில் காய்கறி பெட்டியை தூக்கும்போது அதிலிருந்து பாம்பு அவரை தீண்டியது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பின் தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News June 1, 2024

சிறுவன் மீது பாய்ந்த போக்சோ

image

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அச்சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 1, 2024

கூடலூர் தெருக்களில் மூலிகை செடி 

image

தேனி மாவட்டம் கூடலூரில் சோலைக்குள் கூடல் அமைப்பின் சார்பில் இன்று கோட்டை மேடு, கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருக்களில் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவதற்கு குழிதோண்டும் பணிகளும், அழகர் கோயில் வளாகத்தில் கவாத்து எடுக்கும் பணிகளும் நடைபெற்றது. இதில் சோலைக்குள் கூடல் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!