Theni

News June 7, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக திருநங்கைகள் சிறப்பு முகாம்

image

திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம், திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம் 21.06.2024 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News June 7, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வு பணிகள் குறித்து கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்
நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி
முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில்
இன்று (07.06.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

தேனி: ரூ.6.5 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது இடத்தின் அருகே புகழேந்தி என்பவருக்கு சொந்தமான 2198 ச.அடி காலி மனையை விலைக்கு வாங்கி தருவதாக கூறி அல்லிநகரத்தை சேர்ந்த விஜயசாரதி என்பவர் 6.05 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். இது குறித்து ராஜசேகர் மகன் கவுதம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News June 7, 2024

தேனி: பாதுகாப்பாக வைக்கப்பட்ட இயந்திரம்

image

தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறைக்கு நேற்று (ஜூன்.6) கொண்டு வரப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 2450 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா 1225 வி.வி.பேட், கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பு வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டு அவை போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்பட்டன.

News June 7, 2024

900 ரவுடிகள் “கூகுள்’ வரைபடம் மூலம் கண்காணிப்பு

image

தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டும் 900 ரவுடிகள் குற்ற பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவில் புதிய முயற்சியாக கூகுள் உதவியுடன், ரவுடிகள் வசிக்கும் வீடு, முகவரி உள்ளிட்ட விபரங்கள் கூகுள் வரைபடத்தில் தயாரிக்கப்பட்டு அவற்றை வைத்து தினசரி ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News June 7, 2024

தேனி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகி

image

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்க தமிழ் செல்வனை நேற்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நேரில் சென்று பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுக ஊடக பிரிவு மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

News June 7, 2024

தேனி: கார் மோதி 3 பேர் படுகாயம்

image

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். சொந்த வேலை காரணமாக இவரும் இவரது மகன்கள் ஹரீஷ்குமார் ,  சியாம்சுந்தர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் போடி தேனி மெயின் ரோட்டில் சென்றனர். அதிமுக அலுவலகம் அருகே சென்றபோது வேலன் என்பவர் காரை வேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

News June 7, 2024

போடி:சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. அதி மழை காரணமாக போடி பார்க் நிறுத்தம் அருகே மழை நீரானது சாக்கடை கழிவு நீரில் கலந்து சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News June 6, 2024

தேனி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

தேனி: இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

error: Content is protected !!