Theni

News June 9, 2024

மக்கள் நீதிமன்ற முகாம்களில் 6,449 வழக்குகளுக்குத் தீா்வு

image

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நேற்று (ஜூன்.8) நடைபெற்றது. இதில் நீண்ட காலம் நிலுவையில் இருந்த வழக்குகள் சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விபத்து இழப்பீடு, காப்பீடு, வங்கிக் கடன், காசோலை, ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 6,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

News June 8, 2024

குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

குரூப்-1 க்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 11.06.2024  முதல் துவங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மையத்தை நேரிலோ அல்லது 6379268661
என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தேனி மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

இணையதளம் மூலம் நில அளவை விவரங்கள்

image

தமிழ்நாடு நிலஅளவை, நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ் நிலம்” செயலி
மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

image

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் காமாட்சி. இவரது மகன் ரமேஷிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பால் வாங்க சென்ற சுவேதாவிடம் காமாட்சி தகராறில் ஈடுபட்டதால் அவரை ராம்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 8, 2024

தேனி: கண்காணிப்பு குழு அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை கண்காணித்திட வட்டத்திற்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2044 அறை கண்காணிப்பாளர்கள், 41 இயக்க குழுக்கள், 7 பறக்கும் படை, வீடியோ கிராபர் மொத்தம் 159 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

News June 8, 2024

தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு

image

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கப்படும் பல்வேறு விண்ணப்பங்களுக்கு 16 நாட்களுக்குள் தீர்வு கிடைத்திடும் வகையில் அதனை கண்காணிக்க தாலுகா வாரியாக 5 அலுவலர்களை நியமித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும் விண்ணப்பங்களை வரிசை அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு செய்யப்படுவதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 8, 2024

வருமான வரி செலுத்துபவரா நீங்க

image

தேனி வருமானவரித்துறை மூலம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஏ.பி.எம் ஹோட்டலில் ஜூன் 11 அன்று வருமான வரி செலுத்துபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்துபவர்களின் கடமைகள், வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி வருமானவரித்துறை அறிவித்துள்ளது. 

News June 8, 2024

திராட்சை தோட்டத்தில் திருடிய இருவர் கைது

image

சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகுதுரை. கள்ளப்பட்டி ரோட்டில் இவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. கடந்த 30ம் தேதி அவர் தோட்டத்திற்கு சென்றபோது ரூ. 13,200 மதிப்புள்ள மோட்டார் வயர் திருடு போயிருந்தது. அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருநாதபாண்டி,  கோகுலபாண்டி ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. நேற்று ஓடைப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News June 8, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமயில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி, மாவட்ட சமுக நல அலுவலர் சியாமளா தேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமயில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி, மாவட்ட சமுக நல அலுவலர் சியாமளா தேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!