India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் 5-ஆவது சுற்று தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, இன்று (10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைப் போக்கும் விதமாக அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தேனி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்ற மாவட்ட காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தங்களது பணி மென்மேலும் சீரும் சிறப்புமாய் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று (ஜூன்.10) பி.எஸ்சி., கணிதம் இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஜூன் 12 இல் பி.ஏ., வணிகவியல் – கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தொழில் சார்ந்த பாடப்பிரிவு படித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று(ஜீன்.10) வேலப்பர் கோவிலுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் காயங்களுடன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 383 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மூலமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை (ஜூன்.10) பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் தேனியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 154 மையங்களில் குரூப் -4 தேர்வு நடைபெறுகின்றது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தேனி மேரி மாதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தேனியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருந்த கைரேகை பிரிவு காவல்துறையினர் ஆகியோர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 7-ம் வகுப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி திறப்பதற்கு முன் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து சீரமைக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.