India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் உள்ள 1,01,800 கால் நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 62,840 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.2024 வரை குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வி, தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் மற்றும் டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

கைலாசப்பட்டியை சோ்ந்த துரைச்சாமி (74) பெரியகுளம்-தேனி சாலையில் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையை கடக்க முயன்ற துரைச்சாமி மீது தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஜூன். 16-ல் உயிரிழந்தாா். விபத்து குறித்து தென்கரை போலீசார் நேற்று (ஜூன்.17) வழக்கு பதிவு.

தேனி மாவட்டத்தில் உள்ள 1,01,800 கால் நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 62,840 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஜீன்.18) 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஜீன்.17) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் ஜூன்.19ஆம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் சமரசத்துக்கு முந்தைய பேச்சுவார்த்தைக்கான அமா்வு நடைபெறுகிறது. இந்த அமா்வில் நேரிலோ, காணொலி காட்சி மூலமோ வழக்காடிகள் , வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு வழக்குகள் மீது தீா்வு காணலாம். 04546-291566-ல் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவுசெய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் திரவ உயிா் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஏக்கா் ஒன்றுக்கு அரை லிட்டா் திரவ உயிா் உரத்தை பயன்படுத்தலாம். திரவ உயிா் உரம் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநா் அறிவித்துள்ளார்.

பெரியகுளம் வட்டத்தில் 19.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரை கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அப்பகுதியில் தங்கி அரசு திட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி வழங்கி பயன்பெறுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.