Theni

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

தேனி மக்களவை தொகுதியில் 6 ஆம் தேதி தேர்தல்

image

தேனி மக்களவை தொகுதியில் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.06 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் விடுப்பட்ட நபர்களுக்கு இரண்டாவது முறையாக வருகின்ற ஏப்.09 அன்று வாக்குப்பதிவு செய்திட வாய்ப்பளிக்கப்படுகிறது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.வீ. சஜீவனா அறிவித்துள்ளார்.

News April 4, 2024

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் மரணம்

image

குச்சனூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் டூவீலரில் சங்கராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் டேங்க் அருகே சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி திடீரென கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 4, 2024

தேனி தொகுதியில் 6074 வாக்குச்சாவடி அலுவலர்கள்

image

தேனி மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1225 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1469 தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-4 வாக்குப்பதிவு அலுவலர்கள் 198 நபர்கள் என மொத்தம் 6074 நபர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

News April 3, 2024

முதல்வர் வருகை: அமைச்சர் ஆய்வு

image

தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து தேனி மாவட்டம், லட்சுமிபுரம் பகுதியில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்  பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  இது தொடர்பான பணிகள் நடைபெறுவதை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி இன்று  நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News April 3, 2024

தேனியில் லட்சக்கணக்கில் பறிமுதல்

image

தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த மார் 17-ம் தேதி முதல் நேற்று (ஏப்.2) வரை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.13,91,390, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.12,06,900, போடி சட்டமன்ற தொகுதியில் ரூ.24,59,180, கம்பம் சட்டமன்ற தொகுதியில் ரூ.5,83,000 என மாவட்ட அளவில் மொத்தம் ரூ.56,40,470 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 3, 2024

மத்திய அமைச்சா் அமித்ஷா நாளை தேனி வருகை

image

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, தேனியில் நாளை நடைபெற உள்ள வாகனப் பிரசார ஊா்வலத்தில் (ரோட் ஷோ)  உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கிறாா். நாளை 4 மணிக்கு தேனி வருகை புரியும் அவர் தேனி-பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலிலிருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறாா்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு 

News April 3, 2024

தேனி:டிடிவி துணைவியார் தேர்தல் பரப்புரை

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களான மீனாட்சிபுரம் அடைக்கப்பட்டனர் பொட்டல் களம் வினோபாஜி காலனி சிலமலை கரட்டுப்பட்டி சில்ல மரத்துப் பட்டி ராசிங்காபுரம் நாகலாபுரம் பகுதிகளில் இன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

News April 2, 2024

“துணிப்பை தூக்கத் துணிவோம் ” விழிப்புணர்வு

image

தேனி-அல்லிநகரம் நகராட்சி தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நன்செய் அறக்கட்டளை மற்றும் வாசவி கிளப் இணைந்து இன்று “துணிப்பை தூக்கத் துணிவோம் ” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் ஜீவிதா, லோகேஷ், ரிஷப், கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு துணிப்பைகளையும் , புத்தகங்களையும் வழங்கினார்.

News April 2, 2024

தேனியில் மிதமான மழை

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டிபட்டி, தேனி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!