India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் நேரடிச் சேர்க்கை நடைபெறுகிறது. நேரடி சேர்க்கைக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15. தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜுலை 15 வரை நடைபெறுகிறது. 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.750, சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ஏதும் இல்லை. 9344014240 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் இன்று மாவட்ட தலைவர் கு.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அவரவர் பணி செய்யும் இடங்களில் இந்த போராட்டத்தில் அலுவலர்கள் ஈடுபட்டனர். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் வரும் 10ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: சர்வதேச நெகிழிப் பை இல்லா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 7.ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூறி, நிலையான மாற்று வழிகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவித்தலாகும். இதன் ஒரு பகுதியாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தேனி கலெக்டர் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதாகவும், எனவே அப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என தனது கோரிக்கை மனுவினை வழங்கினார்.

கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் மற்றும் தேனி ரயில் நிலையம் இடையிலான 45 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்வே பாதை அமைத்திட ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹாவை தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தேனி மாவட்டத்தின் வணிகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த பயிற்சி தேனி எஸ்பி அலுவலகத்தில் மே 14 அன்று துவங்கியது. பயிற்சிக்காக விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 1829 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு தேனி சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதுவரை 1590 பேர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள நிலையில் எஞ்சிய 239 பேர் பயிற்சி பெற உள்ளனர் என மாவட்ட காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி வடக்கு, தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.அப்துல்லாஹ் பத்ரி தலைமையில் நேற்று பங்களாமேட்டில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விரைந்து மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நடப்பு ஆண்டில் காரீப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு தேனி ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை KSHEMA GIC என்ற காப்பீடு நிறுவனம் செயல்படுத்துகிறது.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டியில் பங்கேற்றவர்களில் தமிழக அணிக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியான ஜெமிமா கோல் கீப்பராக தேர்வாகி உள்ளார். இவர் இந்தூரில் ஜூலை 7 முதல் 11 வரை நடக்க உள்ள தேசிய வாட்டர் போலா விளையாட்டில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.