India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் உள்ள பசுக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடந்த மாதம் காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின. தற்போது இந்த பணி முடிவுற்ற நிலையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மேகமலை பகுதியில் உள்ள 210 மாடுகளுக்கு அடுத்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11-ஆம் தேதி முதல், 2 -ஆம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை சார்பில் திட்ட ஒப்புதல், நில வகைப்பாடு மாற்றம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆவணம் வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சேமிப்புக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஜூலை 15-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை அஞ்சலகங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், துணை அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என அஞ்சல் துறை கோட்டக் கண்காணிப்பாளர் தகவல்.

இரண்டாம் கட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் ஜூலை 11-ஆம் தேதி முதல் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட தொழில் மையம் (DIC) சார்பில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின்கோட்டுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு சற்று பாதிப்பு ஏற்படுத்தலாம்.

தேனி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறும் கடைகளில் உரங்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த ஓராண்டில் உண்மை இருப்பிற்கும், பி.ஓ.எஸ். கருவியில் உள்ள இருப்பிற்கும் வேறுபாடு இருந்த 13 கடைகள், உரிமத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்களிடமிருந்து உரங்களை பெற்று விற்பனை செய்த 27 கடைகளுக்கும் உர விற்பனை செய்ய தடைவிதித்துள்ளதாக மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி 2 பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு ஜூலை 8ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவா்கள் விண்ணப்ப நகலை சமர்ப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். விவரங்களுக்கு 6379268661 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 2 மற்றும் குரூப் 2எ தேர்வுக்கான 2327 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்

தேனி மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 162 அரசு புறம்போக்கு ஊரணி, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளன. அவற்றில் இருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களின் இறுதிச் செலவு கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் கனிஸ்ட்யாசுவிடம் செலவின கணக்குகள் ஒப்படைக்கப்பட்டன. இப்பணி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்தல் செலவின கணக்குகளை சரிபார்க்கும் பணியை தேர்தல் கணக்கு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.