India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5ஆம் தேதி வரை 21 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன், தேனி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோர் விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தேனி பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் வேளாண் கல்லூரி பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கள் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பாகமாக வாழையை தாக்கும் அஸ்வினி பூச்சிகள் விளைச்சல் குறைப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஏப்.12) தேனி வருகை தரவுள்ளார். தேனி வரும் அவர் பங்களாமேடு பகுதியில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வத்தலக்குண்டை சேர்ந்தவர் ராஜா. இவர் ஜல்லிப்பட்டி டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது டூவீலரில் வத்தலகுண்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஏ.புதுப்பட்டி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ராஜா சென்ற டூவீலர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வா் திருக்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சித்திரை திருவிழா கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 ஆம் ஆண்டாக தற்போதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் திருக்கல்யாணம் மட்டும் வருகின்ற ஏப்.20 ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
தேனி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலையொட்டி 100 % வாக்களிப்பதன்
அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில்
நடைப்பயண பேரணி 5-ம் நாளான இன்று (11.04.2024) ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போடிநாயக்கனூர் ரயில்வே நிலையத்தில் இன்று சென்னையிலிருந்து கரூர், ஈரோடு, மதுரை மார்க்கமாக போடிநாயக்கனூர் வந்த ரயிலில் வந்த பயணிகளிடம் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அனுமதி இன்றி கொண்டுவரப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்தனர். இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த குடிமக்கள் 576,மாற்றுத்திறனாளிகள் 586 என மொத்தம் 1162 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தேனி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.
Sorry, no posts matched your criteria.