India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று தேனியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் பொருட்டு நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வழங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூலம் குறைந்த வட்டி கடனாக பெற்று வழங்கப்படுகிறது. இதனால் விவசாய நிலம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்ணான 04546-250101 என்ற எண்ணிற்கு மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசால் TN-Alerts என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை Google Play Store பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஷஜீவனா இன்று (அக்.14) தெரிவித்துள்ளார்.
அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் யாரும் ஆறு மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், தங்களது வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விநியோகிக்கப்படும் குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை கவனமாக கையாள வேண்டும். மேலும், விநியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியார் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் செப்.13ல் 132 அடியை எட்டிய அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி(அக்.13) 121 அடியாக குறைந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 1033 கன அடியில் இருந்து 1000 கன அடியாக தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு என்ன வகையான பாதிப்பு, என்ன வகையான காய்ச்சல் என கவனித்து அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 126.28 அடியாகும். தற்போது நீர்மட்டம் உயர்வால் 117.40 அடியாக ஆனாது. இந்த நீர்மட்டத்தால் விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியில் குடிநீர் தட்டுப்பாடுக்கு வழி இருக்காது என்று மகிழ்ச்சியடைந்தனர்.
தேனியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கால்நடைகள் கணக்கெடுப்பை துல்லியமாக நடத்த நவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி நெட் ஒர்க் கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தலாம். இந்த செயலியை பாரத பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பின் இந்தியா முழுவதும் இந்த செயலி மூலம் கால்நடைகள் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
கம்பம் மெட்டிலிருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று உத்தமபாளையம் வழியாகச்செல்லும் போது பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரமிருந்த இட்லி கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கேரளத்தைச் சேர்ந்த மத்தீவ் மகன் தாமஸ் (56) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவரும் காயமடைந்தனர்
Sorry, no posts matched your criteria.