India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல் பயிருக்கு தழைச்சத்து(நைட்ரஜன்) 12 முதல் 14 சதவீதம் தான் தேவை. ஆனால் நாம் இடும் யூரியாவில் 46% உள்ளது. நெல் பயிர் எடுத்த 14 சதவீதம் போக மீதமுள்ள நைட்ரஜன் மண்ணில் தங்கிவிடும். இதனால் தழைச்சத்துக்கள்(நைட்ரஜன்) அதிகரித்து மண்ணின் வளம் கெட்டு, விளையும் தன்மை குறையும் எனவே வேளாண் அதிகாரிகளிடம் கேட்டு தேவையான உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

2026இல் பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேற்று(ஜூலை 24) தேனியில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக தற்போது சுயநலவாதிகளின் கையில் சிக்கியுள்ளதாக விமர்சித்த அவர், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் பாஜக தலைமையில் ஆட்சி அமைய ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சிப் படிப்பில் சேர்வதற்கு இணையதளம் மூலம் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை கூட்டுறவு மேலாண்மை நிலையம், தொலைபேசி எண்: 04554-244465, கைப்பேசி எண்கள்: 96298 69957, 82701 71516- ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐடிஐயில் நேரடி சேர்க்கை இம்மாதம் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும், ஐடிஐயில் சேர விரும்பும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகைபுரிந்து தாங்கள் விரும்பும் தொழில் பிரிவை தேர்வு செய்து சேர்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு ஐடிஐயை 93440 14240 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஐடிஐ முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.

க.மயிலாடும்பாற ஒன்றியத்துக்குட்பட்ட வருசநாடு வேணியம்மாள் கோவில் மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தப்பட்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐடிஐயில் நேரடி சேர்க்கை இம்மாதம் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும், ஐடிஐயில் சேர விரும்பும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகைபுரிந்து தாங்கள் விரும்பும் தொழில் பிரிவை தேர்வு செய்து சேர்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு ஐடிஐயை 93440 14240 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஐடிஐ முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஆண்டிபட்டி 1070, போடி 692, பெரியகுளம் 1049, தேனி 759, உத்தமபாளையம் 2700 என மொத்தம் 6270 பேர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இவர்களை வீட்டிற்கே சென்று ஆய்வுகள் செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்விற்கு பின் ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கும் பணி துவங்க உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தேன் வளர்ப்பினை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டி, தேனீக்கள், தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இவற்றின் செலவுத்தொகையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேனி தலைமை தபால் நிலையம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று (ஜூலை 23) ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சாத்தியம் இல்லாத இலக்குகளை நிர்ணயித்து கோட்டம், உட்கோட்டம் அதிகாரிகள் நடந்து கொள்வதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 24) காலை 9 மணிக்கு அமமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆலோசனைக் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.