India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரியகுளம் கீழ வடகரையை சேர்ந்தவர் முருகன். இவர் தரப்பிற்கும் வீராச்சாமி தரப்பினருக்கும் 22 ம் தேதி நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆட்டச்சட்டி எடுத்து ஆடுவதில் தகராறு ஏற்பட்டது. திருவிழா முடிந்தவுடன் வீராசாமி தரப்பினர் 4 பேர் முருகனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது அரிவாள் மற்றும் கம்பியால் தாக்குதல் நடத்தினர். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மாலை 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு வைகை அணையில் இருந்து நீர் எடுத்து சுத்திகரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளை(மே 24) ஆகிய இரு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா தெரிவித்துள்ளார்.
பெரியகுளத்தை சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி என்பவர் நேற்று பெரியகுளம் கனரா வங்கியில் பணம் செலுத்துவதற்காக சென்று உள்ளார். பணத்தினை சோதித்த வங்கி மேலாளர் அது கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த நிலையில் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் விக்னேஷ் மூர்த்தியிடம் வக்கீல் ஜீவஜோதி என்பவர் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ள நோட்டினை கொடுத்து தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானலில் உற்பத்தி செய்யப்பட்ட பிளம்ஸ் பழங்கள் தற்போது தேனி நகர்பகுதியில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. பிளம்ஸ் பழங்கள் கோடை காலமான மே-யில் துவக்கி ஒரு மாதம் விற்பனை செய்யபட்டு வரும். இந்தாண்டு வரத்து தாமதமாக துவங்கி உள்ளது. தற்போது கிலோ ரூ.280 முதல் ரூ.320 வரை விற்பனையாகிறது. பொதுமக்கள் பலரும் பிளம்ஸ் பழத்தினை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய திறன் மேம்பாட்டு தொழில்முனைவோர் அமைச்சகம் இணைந்து தேசிய அளவில் நடத்திய திறனறியும் போட்டி டில்லியில் நடைபெற்றது. இதில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கனிணி பொறியியல் மற்றும் அறிவியல் துறையின் மூன்றாமாண்டு மாணவர் S.முகிலன் வெப் டெக்னாலஜி திறனறியும் போட்டியில் பங்கு பெற்று தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.
மத்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024-க்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியான வீரர்கள் http://awards.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04545 253090 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, ஊத்தம்பாறை , பிச்சாங்கரை , கொட்டக்குடி போன்ற பகுதிகளில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போடி பகுதியில் உள்ள அனை பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைப்பதற்கும் பொதுப்பணி துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.
Sorry, no posts matched your criteria.