Theni

News March 27, 2025

தேனி: திருமணத்தடையை நீக்கும் அற்புத கோவில்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் கோவில் . இந்த கோவிலில் ஞானாம்பிகையுடன் சிவன் சன்னதி உள்ளது . கோவில் திருவிழா சமயங்களிலும் , பங்குனி சிறப்பு நாட்களிலும் இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 27, 2025

காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

image

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News March 27, 2025

தேனியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

image

ஆண்டிபட்டி அருகே வைகை புத்தூரைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. குடும்பத்துடன் கோவையில் தங்கிப் பணி செய்து வருகிறார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்து 1 பவுன் சங்கிலி திருடு போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 26, 2025

மாவூத்து வேலப்பர் கோயில் பற்றி தெரியுமா?

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வருசநாடு பகுதியில் அமைந்துள்ளது மாவூத்து வேலப்பர் கோயில். மிகவும் புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மன அமைதியை பெறவும் , குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீக்கவும் இங்கு வந்து மக்கள் பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

News March 26, 2025

சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. மாசுபட்ட குடிநீர் வழியாகவும் இந்த தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்ய ஊராட்சிகளை வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், அதிக தண்ணீர் அருந்தி நீர்ச்சத்து இழப்பை தடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

News March 26, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (மார்ச்.25) நீர்மட்டம்: வைகை அணை: 58.50 (71) அடி, வரத்து: 181 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113 (142) அடி, வரத்து: 127 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 67.40 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 34 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

News March 26, 2025

தேனியில் துணை முதல்வர் ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை துணை முதல்வர் உதயநிதி மார்ச்.28, 29 அன்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வில் திட்ட பணிகளின் முன்னேற்றம், பதிவேடுகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.  இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிலை குறித்து பட்டியல் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

தேனி நகராட்சியில் ரூ.10.58 கோடி வரி வசூல்

image

தேனி நகராட்சியில் கடந்தாண்டு பல்வேறு வரிகள், வாடகை பாக்கி என மொத்தம் ரூ.12.26 கோடி வசூல் நிலுவையில் இருந்தது. இதில் ரூ.10.40 கோடியை மார்ச் இறுதிக்குள் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரை ரூ.10.58 கோடி வசூலிக்கப்பட்டு நூறு சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு

image

தேனி மாவட்டத்தில் 50,189 விவசாயிகள் உள்ளனர். அவர்களில் தாலுகா வாரியாக தேனி 2,839, ஆண்டிபட்டி 6,904, பெரியகுளம் 5,496, போடி 4,577, உத்தமபாளையத்தில் 9,158 என மொத்தம் 28,974 விவசாயிகள் தனி அடையாள எண் வழங்குவதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்துள்ளனர். மார்ச்.31 க்குள் மீதமுள்ள விவசாயிகள் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 26, 2025

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில்  தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!