India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போடி: காபி வாரியம் மூலம் காபி தோட்ட தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் போடி காபி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அதனை உரிய ஆவணங்களுடன் நவ.20.க்குள் போடி காபி வாரிய விரிவாக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என போடி காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தேவி (35). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் தேவி வலியின் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியின் வேதனை தாங்காமல் தேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன் (16). இவரது தாயார் ஜெயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்று முதல் குமரன் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற குமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2017-ல் சிறுமியின் உறவினரான சிவராஜ் (41) என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். அவரை கடந்த ஏப்ரலில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று (நவ. 1) சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் ஆண்டுக்கு 1,750 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் பெரியகுளம், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆண்டுக்கு 10,000 பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கால்நடைத்துறை 2022-ன் கணக்கின்படி மாவட்டத்தில் 25,000 தெரு நாய்களும், 15,000 வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தகவல்.

தேனி வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போடி பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவரது கணவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து கீர்த்தனாவின் கணவர் குடித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா நேற்று (நவ. 1) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.