India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

போடி குப்பிநாயக்கன்பட்டி மருது பாண்டியர் தெருவை சேர்ந்தவர்கள் ராஜபிரபு (35) – கீர்த்தனா (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராஜபிரபு மது பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் உள்ள பொருட்கள், குழந்தைகளின் கொலுகளை விற்று மது குடித்துள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

தேனி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <

கம்பமெட்டு சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்டுவதற்காக ரெக்சின் கழிவுகளை எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளர் சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் தலைமையில் காலை 10.30 மணிக்கு மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள். அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், உழவர் நல சேவை மையங்கள் துவக்க வேளாண் வணிகத்துறைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூல்10 லட்சம் திட்ட மதிப்பீடு என்றால் ரூ.3 லட்சமும், ரூ.20 லட்சம் மதிப்பீடு என்றால் ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் வட்டார உதவி இயக்குநர்களை சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

மதுரையில் உள்ள கார் பராமரிப்பு நிலையத்தில் வேலை பார்க்கும் தேனியை சேர்ந்த ஜோதிராஜசேகரன் என்பவர் பராமரிப்பிற்காக வந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக நேற்று (நவ.2) தேனிக்கு எடுத்து வந்துள்ளார். கார் பெரியகுளம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

போடி: காபி வாரியம் மூலம் காபி தோட்ட தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் போடி காபி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அதனை உரிய ஆவணங்களுடன் நவ.20.க்குள் போடி காபி வாரிய விரிவாக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என போடி காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.