India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி நகராட்சியில் கடந்தாண்டு பல்வேறு வரிகள், வாடகை பாக்கி என மொத்தம் ரூ.12.26 கோடி வசூல் நிலுவையில் இருந்தது. இதில் ரூ.10.40 கோடியை மார்ச் இறுதிக்குள் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரை ரூ.10.58 கோடி வசூலிக்கப்பட்டு நூறு சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 50,189 விவசாயிகள் உள்ளனர். அவர்களில் தாலுகா வாரியாக தேனி 2,839, ஆண்டிபட்டி 6,904, பெரியகுளம் 5,496, போடி 4,577, உத்தமபாளையத்தில் 9,158 என மொத்தம் 28,974 விவசாயிகள் தனி அடையாள எண் வழங்குவதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்துள்ளனர். மார்ச்.31 க்குள் மீதமுள்ள விவசாயிகள் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தேனியில் சுய தொழில் செய்ய பெண்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில்தான் காளான் வளர்ப்பு. வீட்டிலேயே குடில் அமைத்து காளான் வளர்த்து விற்பனை செய்யலாம். . அதேபோல உற்பத்தி செய்யப்பட்ட காளானிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களான காளான் மால்ட் , காளான் தோசை பொடி ,காளான் முறுக்கு போன்ற பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் மாதம் 50,000 வரை வருமானம் பெற முடியும் .
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது செல்போனில் வரும் OTPஐ யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும், தற்போது OTP குற்றங்கள் பெருகி வருவதால் OTP மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட வாய்ப்பு உள்ளது எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. வங்கி , இணையவழி குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 35 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க பிப்.13.ல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் 35 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரிசீலனை செய்து, கலெக்டர் ரஞ்சித்சிங்கின் ஒப்புதல் பெற்று 17 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 25) நீர்மட்டம்: வைகை அணை: 58.46 (71) அடி, வரத்து: 262 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113 (142) அடி, வரத்து: 187 க.அடி, திறப்பு: 278 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 67.73 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 34 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
திண்டுக்கல் குமுளி இடையே அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தேனி மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல தரப்பை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக் குழுவிலிருந்து 50க்கு மேற்பட்டோர் தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு நடைபயணமாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேனியைச் சேர்ந்தவர் லட்சுமண பிரதீப் முருகன். மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் 2ம் நிலை கேப்டனாக பணியாற்றுகிறார். இந்நிலையில், மார்ச்.17 ல் வணிக கப்பலில் மத்திய ஆப்ரிக்க பகுதியில் சென்றபோது, கடற்கொள்ளையர் கப்பலைத் தடுத்து லட்சுமண பிரதீப் உள்ளிட்ட 10 பேரைக் கடத்தினர். அவர்கள் தற்போது வரை எங்குள்ளனர் எனத் தெரியவில்லை. இவர்களில் லட்சுமண பிரதீப் முருகன் உட்பட மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தேனி மாவட்டத்தில் இன்று 24.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். இரவு நேரத்தில் வெளியே செல்லும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .
Sorry, no posts matched your criteria.