India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூத்தூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் அறிவுச் செல்வி. இவருக்கு விஜயபாலன் என்பவருடன் திருமணம் நடந்து திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் வசித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்தவர் நேற்று திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குணமங்கலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் பாண்டிமீனா (23). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் 31ம் தேதி இரவு குணமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பவர் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பாண்டி மீனாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாண்டி மீனாவின் தாய் செல்வி பூதலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இன்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம். SHARE IT.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் வெளியிட்டுள்ள செய்தியில், பூதலூர் அருகே தட்டாங்குளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதனையடுத்து 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜேந்திரன், மங்களம், கார்த்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தஞ்சை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், சிறப்பு பேருந்துகள் 1,967 என மொத்தம் 4,059 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 2,31,363 பயணிகள் பயணித்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு 94433 31190 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது கவனத்துடன் செல்லவும், தீபாவளி தள்ளுபடி என்ற பெயரில் கைப்பேசி சமூக ஊடகங்களில் வரும் பொய்யான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது கவனமாக அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் என பல்வேறு தஞ்சை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.