Thanjavur

News November 5, 2024

உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்ப அட்டை, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, பட்டா, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 392 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 5, 2024

தஞ்சை ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 392 மனுக்கள், இலவச வீட்டு மனை, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை மற்றும் பட்டா மாற்றம் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். ரமேஷ் ராஜேந்திரனின் வாரிசுகளுக்கு ரூ. 39,51,233-க்கு காசோலை வழங்கப்பட்டது.

News November 5, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்தடை

image

கும்பகோணம் அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி பகுதிகளில் நவம்பர் 7-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மாதாந்திர  பராமரிப்பு பணிகள் காரணமாக குறிச்சி, முள்ளங்குடி, கயலூர், திருக்கோடிகாவல், பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News November 5, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தஞ்சாவூரில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை குறித்து மனு அளிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். SHAREIT

News November 4, 2024

தஞ்சையில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை குறித்து ஆட்சியரிடம் ‌ கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

News November 4, 2024

தஞ்சை அருகே 20 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (62) என்பவரை பந்தநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 கிலோ ஹான்ஸ், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News November 4, 2024

தஞ்சை அருகே திமுக கொடி நடும்போது தொழிலாளி பலி

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 7 ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை வர உள்ளார். அவரை வரவேற்பதற்காக திமுகவினர் தஞ்சை சாந்த பிள்ளைகேட் அருகே கொடிகம்பம் வைத்து வந்தனர். அப்போது கொடிக்கம்பம் ஊன்றும் போது உயரழுத்த மின்சாரம் தாக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த நாகராஜன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். இதனையடுத்து அவசரமாக கொடிகம்பங்களை திமுகவினர் அகற்றினர்.

News November 3, 2024

மானியத்தில் புல் வெட்டும் கருவி –  தஞ்சை ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பசுந்தீவனம் பயன்பாட்டினை மேம்படுத்த 50% மானியத்தில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் புல் வெட்டும் கருவி பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஒரு கருவி 16 ஆயிரம் மானியத்தில் வழங்க உள்ளதால், தகுதி உடையவர்கள் வருகிற 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையத்துக்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளைச் சந்தைப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்துமாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓவிய, சிற்பக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் கலைஞர்கள் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

சென்னை பேருந்துகள் புறப்படும் இடம் மாற்றம்

image

கும்பகோணம் – சென்னை முன்பதிவு பேருந்துகள் கும்பகோணம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா. பொன்முடி தெரிவித்துள்ளாா். தீபாவளி பண்டிகை முடித்து கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை 60-க்கும் அதிகமான கும்பகோணம் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.