Thanjavur

News June 4, 2024

தஞ்சையில் திமுக முன்னிலை

image

தஞ்சை மக்களவைத் தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

திமுக – 25,837

தேமுதிக – 9,629

பாஜக – 8,011

நாத – 7,385

16,208 வித்தியாசத்தில் திமுக முன்னிலை.

News June 4, 2024

தஞ்சையில் கண் தானம் வழங்கும் விழா

image

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் 101 பேர் கண்தானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் நாடாளுமன்ற வேட்பாளர் ச.முரசொலி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, மேயர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 4, 2024

தஞ்சை: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

ELECTION: தஞ்சையில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் மொத்தம் 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் முரசொலி, அதிமுக சார்பில் சிவநேசன், பாஜக சார்பில் எம்.முருகானந்தம், நாம் தமிழர் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகளை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 11ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 18 ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி கிராமசபை கட்டிடம் பட்டுக்கோட்டையிலும் நடைபெறுகிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கையில் எத்தனை சுற்றுகள் ?

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதில், மன்னார்குடி 20 சுற்றுகளாகவும் , திருவையாறு 22 சுற்றுகளாகவும் , தஞ்சாவூர் 21 சுற்றுகளாகவும் , ஒரத்தநாடு 21 சுற்றுகளாகவும் , பட்டுக்கோட்டை 20 சுற்றுகளாகவும் , பேராவூரணி 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 3, 2024

தஞ்சை: அலுவலர்கள் குறித்த முழு விவரம்

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குக்கு 8 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 306 அலுவலர்கள், 102 நுண் பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 102 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

News June 3, 2024

ஸ்ரீகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா

image

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோயிலில் 16 ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்கள் பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில் இருந்து பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

News June 2, 2024

வீடியோ கிராபர்களுக்கு அழைப்பு – ஆட்சியர்

image

குரூப் 4 தேர்வு வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 223 தேர்வு மையங்களில் 65,520 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை காலை 7 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை பதிவு செய்து தேர்வுகூட முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.2,500 ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள வீடியோகிராபர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அணுக தெரிவிக்கப்பட்டுள்ளது

News June 2, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைப்பொழிவு விவரம்

image

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பூதலூரில் 1.6 மி.மீ, தஞ்சாவூரில் 5 மி.மீ, பாபநாசத்தில் 1.2 மி.மீ, கும்பகோணத்தில் 20 மி.மீ, வல்லத்தில் 19மி.மீ, அயன்குடியில் 12 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 17 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 0.8 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.