India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்த உறுதிமொழி (36) மற்றும் அவரது நண்பர் கணேசன் (47), இருவரும் ஆர்டிஓ அலுவலகம் அருகே தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உறுதிமொழி உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் கணேசன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தனபால் (50). நேற்று காலை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டார். மாலை வீடு திரும்பிய நிலையில், ஆடுகள் மற்றும் கன்றுகுட்டி திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதேபோன்று 12 ஆடுகளும் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள மடத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (55). கூலி தொழிலாளியான வீரையன் இன்று காலை தனது வீட்டின் பின்புறம் கொல்லை பகுதிக்குச் சென்றபோது அங்கு உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் மின்கம்பியை அவர் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வீரையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூரில் சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ. 25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது என மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஏற்கெனவே உள்ளேயும், வெளியேயும் பயன்பாடின்றி உள்ள கழிப்பறைகள் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளன. தவிர, வெளியே புதிதாக கழிப்பறை கட்டப்படவுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, செய்யப்படவுள்ளன.
அய்யம்பேட்டை கடை வீதியில் உள்ள தஞ்சை – கும்பகோணம் சாலையில் மினி பஸ் டிரைவர் மர்ம நபர்களால் இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிப்படைந்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்காக பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நேற்று (06.12.2024) கனரக வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
களிமேடு கிராமத்தை சேர்ந்த் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்பெண் காதலனை திருமணம் செய்து கொண்டு விசாரணையை முடித்து வைக்க கோரினார். நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக பெண்ணிற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபாேன்ற புகார்களுக்கு கடும் தண்டனை என தஞ்சை மாவட்ட போலீஸ் எச்சரித்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (டிச.7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை டிசம்பர் 12ஆம் தேதி அடையும் என கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம்கள் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தனியாா் பொதுத்துறை நிறுவனங்களை விட, பொதுமக்களுக்குக் குறைவான தவணையில் (பிரீமியம்) நிறைவான போனஸ் வழங்கி வருகிறது.
தஞ்சாவூா் அருகே ஞானம் நகரில் எஸ். பசுபதி (55) என்பவா் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இக்கடைக்கு நவம்பா் 29- ஆம் தேதி பசுபதி இல்லாதபோது வந்த அடையாளம் தெரியாத பெண், 2 பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைத்தாா். இதற்கு கடையில் இருந்த ஊழியா் ரூ. 87 ஆயிரம் கொடுத்தாா். பின்னா் பசுபதி வந்து நகையைச் சோதனையிட்டபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Sorry, no posts matched your criteria.