Thanjavur

News December 10, 2024

வெறி நாய் கடித்து ஏழு ஆடுகள் உயிரிழப்பு.

image

கோனேரிராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடுகளை கொட்டகையில் கட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு வந்து பார்த்தபோது ஏழு ஆடுகளையும் வெறிநாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த ஏழு ஆடுகளும் சம்பவ இடத்திலே உயிரிழந்து கிடந்துள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2024

தஞ்சாவூர்: ஆட்சியர் உறுதி மொழியினை ஏற்றார்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஷ் ராவத், கும்பகோணம் சார் ஆட்சியர் செல்வி.ஹிருத்யா எஸ்.விஜயன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.எஸ்.சரவணன மற்றும் பலர் உடன் உள்ளனர்.

News December 10, 2024

1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

image

திருவோணத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெட்டுவாக்கோட்டையில் காவல்துறையினர் வாகனசோதனை ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவையும் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர். ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2024

4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் –  ரூ.50,000 அபராதம்

image

தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக தஞ்சை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

News December 10, 2024

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

துறையூர், ஈச்சங்கோட்டை, மின்னகர், வல்லம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (டிச.11) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், ஈச்சன்கோட்டை, துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. 

News December 9, 2024

பொதுமக்களிடம் இருந்து 615 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 615 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

News December 9, 2024

 கறவைமாடு வாங்குவதற்கான ஆணை

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தாட்கோ சார்பில் கறவைமாடு வாங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர்தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

News December 9, 2024

தஞ்சையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் விழா

image

தஞ்சை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒரு வார காலம் நடக்கவுள்ளது. ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படும். என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்

News December 9, 2024

1,250 டன் அரிசி கோவைக்கு அனுப்பி வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றி தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News December 9, 2024

காசநோய் கண்டறியும் முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரண்டு வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், சளியுடன் ரத்தம் வருதல், பசியின்மை, எடை குறைதல், மார்பு விலாவில் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!