Thanjavur

News December 12, 2024

தஞ்சை மாவட்டத்தில் தொடரும் மழை

image

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக தஞ்சை உட்பட பல்வேறு டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.12) இரவு 10 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் தெரிவிக்கவும். உடன் செய்தியை ஷேர் செய்யவும்!

News December 12, 2024

தஞ்சை வடகிழக்குப் பருவமழை அவசரகால உதவி எண் அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகிழக்கு பருவமழை தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண் 1077. 04362-230121. பருவமழை தொடர்பான புகார்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News December 12, 2024

தஞ்சையில் கல்லூரிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று (டிச.12) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது: காவல்துறை அதிரடி

image

தஞ்சாவூர் மாதாகோட்டையில் கடந்த 4 தேதி பணி முடிந்து நடந்து சென்ற ஆசிரியரிடம் செயினை மர்ம நபர்கள் வழிப்பறி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடன் தங்க நகைகள் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

News December 12, 2024

தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

தஞ்சை எம்.பி ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை 

image

திருச்சி- தாம்பரம் சிறப்பு இரயிலினை தினசரி இயக்க வேண்டும், தாம்பரம் இரயிலினை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழிதடத்தில் இயக்க வேண்டும், தஞ்சாவூர் விழுப்புரம் மெயின் லைனை ஒரு வழி பாதையில் இருந்து இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இன்று‌ டில்லியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வழங்கினார். 

News December 11, 2024

தஞ்சை: திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி

image

திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, 24ந் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 26 ந் தேதி 10.30 மணிக்கு பேச்சுப்போட்டியும், 28ந் தேதி வினாடி வினா போட்டியும் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் மைய நூலகத்தில் நேரிலோ (அ) தொலைபேசி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News December 11, 2024

தஞ்சை: கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

image

அய்யம்பேட்டையை சேர்ந்த சிற்றுந்து ஓட்டுநர் சிவ மணிகண்டன் என்பவரை, சுந்தரேசன் என்பவர் 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் கொலை செய்தார்.பின்னர் சுந்தரேசன் உட்பட 3 பேர் போலீசில் சரணடைந்தனர். மேலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 6ஆம் தேதி சுந்தரேசன் மீது சிவ மணிகண்டன் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியர் 3 மாத காலம் அவகாசம் 

image

2015-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019-ம் ஆண்டு ஜூன் வரையிலான பருவங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்களின்  மதிப்பெண் சான்றிதழ்கள் தஞ்சை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. சான்றிதழ்கள் வாங்காத மாணவர்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மூன்று மாதம் (28/2/24) வரை அவகாசம் வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News December 10, 2024

தஞ்சை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!

error: Content is protected !!