India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 14 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு ரூ.154 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார். இந்நிகழ்வில் பங்குபெற உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சை வந்தடைந்தார். SHARE IT.
தஞ்சை தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுபட்டினம் பகுதி கோரிகுளம் பகுதியை சேர்ந்த முருகேசன் (42). ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இன்று அவரது மனைவி சரண்யா (29) வெளியில் சென்று இருக்கும் நிலையில், தனது 4 வயது மகளான நவனிஸ்ரீ தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, முருகேசனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை கைப்பற்றி தாலுக்கா போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பன்னாட்டு அளவிலும் – தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கு விருது பெற தகுதி உடையவர்கள் வருகிற விண்ணப்பங்களை பெற்று 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மான கழக தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் நவம்பர் மாத நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை (நவ.7) செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் வல்லம், கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் என மாவட்டம் முழுவதும் 231 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 424 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23,231 விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் 273 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் நடப்பு சம்பா – தாளடி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய இரண்டு காப்பீடு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 548 ரூபாய் பிரிமியம் செலுத்தி, அதிகபட்சமாக 36,500 க்கு காப்பீடு செய்து கொள்ளலாம். சம்பா – தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ஆம் தேதி கடைசி நாள் என அவர் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவசத்திரம் காவல் நிலையத்தில் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் குணபாலன் என்பவரின் தென்னந்தோப்பில் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேதுபாவசத்திரம் காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்துகள் மற்றும் வரி செலுத்தாத தனியார் பேருந்துகள் குறித்து தஞ்சை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் விதிகளை மீறி செயல்பட்டதாக 21 தனியார் பேருந்துகளுக்கு 47,000 ரூபாய் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்ப அட்டை, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, பட்டா, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 392 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.